225,000க்கும் அதிகமான கொவிட்-19 ஏஆர்டி சுயசோதனை கருவிகள் விநியோகம்

225,000க்கும் அதிகமான கொவிட்-19 ஏஆர்டி சுயசோதனை கருவிகள் விநியோகம்

1 mins read
20da263c-ea46-4f15-8365-595c45a258e9
-

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுக கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ள சந்தைகளுக்கும் உணவங்காடிகளுக்கும் சென்றுள்ளவர்களுக்கு 225,000 க்கும் மேற்பட்ட கொவிட் 19 ஏ ஆர் டி சுய சோதனை கருவிகள் வழங்கப்பெற்றிருக்கின்றன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சு, இம்மாதம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இந்தக் கருவிகளை விநியோகம் செய்ய மக்கள் கழகத்துடன் இணைந்து தான் பணியாற்றியதாகத் தெரிவித்தது.

சோங் பூன் மற்றும் உணவு நிலையம், வாம்போ டிரைவ் ஈரச்சந்தை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றவர்களுக்கு ஏஆர்டி சோதனை கருவிகள் கொடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த இரண்டு சந்தைகளுடனும் பல்வேறு கொவிட்-19 சம்பவங்கள் இணைக்கப்பட்டுள்ளன.