'நிதிவளத் தேவை, பொருளியல் சூழல் கருதி வரி உயர்த்தப்படும்'

'நிதிவளத் தேவை, பொருளியல் சூழல் கருதி வரி உயர்த்தப்படும்'

1 mins read
715a664b-a7dc-4918-b21d-e8ab775ebc16
-

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உட்பட எந்தவொரு வரி விகிதத்தையும் உயர்த்தும் காலகட்டத்தை நிர்ணயித்திட, அரசாங்கம் முதலில் சிங்கப்பூரின் நிதிவளத் தேவைகளையும் நிலவும் பொருளியல் சூழலையும் கருத்தில்கொள்ளும் என்றார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.

2025ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியை சிங்கப்பூர் ஏழு விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடாக உயர்த்தவுள்ள நிலையில், பொருளியல் மீண்டுவரும் வரை அதைத் தள்ளிப்போடுமாறு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் சிலர் இன்று ஆலோசனை கூறினர்.

இருப்பினும் இவ்வாறு ஜிஎஸ்டியை உயர்த்திவிட்டு பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரிவினருக்குக் கட்டணக் கழிவுகள் வழங்குவது இன்றுள்ள நெருக்கடிக் காலத்தில் முக்கியமாக இருக்காது என்றார் திரு வோங்.

சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தின் சுகாதாரப் பராமரிப்பில் அதிகரித்து வரும் செலவினத்தையும் சமாளிக்க ஜிஎஸ்டியை உயர்த்துவது அவசியம் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.