கொவிட்-19 நெருக்கடியால் பள் ளிகளில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. வீட்டில் இருந்த வாறு கற்றலை மேற்கொள்ளும் நிலையும் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும், இம்மாற்றங் களைச் சமாளித்தவாறு தங்கள் கற்றல் பயணத்தை மேற்கொண்ட 14,100க்கும் மேற்பட்ட தொழில்நுட் பக் கல்விக்கழக மாணவர்கள் தங்களின் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
அவர்களில் 19 வயது ஸ்டீவன் முத்துக்குமாரும் ஒருவர். இவரின் குடும்பத்தில் மொத்தம் 10 பேர். தந்தையின் உடல்நலம் பாதிக்கப் பட்டதால் தாயார் ஒருவரே வேலை செய்து வருகிறார். இச்சிரமமான குடும்பச் சூழலுடன் கொவிட்-19 கொள்ளைநோயும் சவால் விடுத் தது. இருப்பினும், ஸ்டீவன் முத் துக்குமார் தம் படிப்பை முடித்து விட்டார். நேற்று நடைபெற்ற பட் டமளிப்பு விழாவில் கல்வி இரண்டாம் அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் தம் உரையில் சிறப்பித் துக் குறிப்பிட்ட ஆறு மாணவர் களில் ஸ்டீவன் முத்துக்குமாரும் ஒருவர். வீட்டில் இருந்து கற்கும் சூழல் ஏற்பட்டபோது இவரது பள்ளி இவருக்கென ஒரு மடிக்கணி னியை நன்கொடை அளித்தது.
இதனால், இவரால் தன் கல்விப் பயணத்தில் கவனம் செலுத்தித் தன் சிறப்புத் தேர்ச்சிநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. இவ்வாறு 1,500க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளும் கைக்கணி னிகளும் மாணவர்களுக்காக வழங்கப்பட்டன. திறன் மேம்பாட்டில் அடுத்து கவனம் செலுத்துமாறு டாக்டர் மாலிக்கி அறிவுறுத்தியிருந்தார்.

