செல்லுபடியாகும் வேலை அனுமதி அட்டை வைத்திருந்தார்கள்

கேடிவி கேளிக்கைக் கூடங்­கள் தொடர்­பில் உரு­வா­கி­யுள்ள கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் 50க்குக் குறை­வான வெளி­நாட்டு உப­ச­ரிப்­புப் பெண்­கள் உள்­ள­னர். அவர்­க­ளின் வேலை அனு­மதி அட்டை கடந்த ஆண்­டுக்கு முன்­ன­தா­கவே வழங்­கப்­பட்­டவை என்­றும் அவை செல்­லு­ப­டி­யா­கக்­கூடி­யவை என்­றும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

வேலை அனு­மதி அட்­டையை வைத்­தி­ருக்­கும் இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­னர், கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் முதல் உப­ச­ரிப்­புப் பணி அல்­லாத வேறு வேலை­க­ளைச் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் அமைச்சர் விளக்­கி­னார். அவர்­களின் முத­லா­ளி­கள் தற்­கா­லி­க­மாக உணவு, பானம் போன்ற வேறு வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்ட நிலை­யில் அங்கு வேலை செய்­து­வந்த இப்­பி­ரி­வி­ன­ருக்கு இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.

"வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரைச் செயல்­பாட்டு நிர்­வா­கி­கள், உண­வு பரி­மா­று­வோர் போன்ற வேறு வேலை­க­ளி­லும் இர­வுக் கேளிக்கை விடு­தி­கள் அமர்த்­து­வ­துண்டு. கொவிட்-19க்கு முந்­திய காலத்­தில்­கூட அவர்­கள் உப­சரிப்­புப் பெண்­க­ளாக வேலை செய்ய அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை," என்­றார் டாக்­டர் டான்.

சுவா சூ காங் குழுத்­தொ­கு­தி­யைச் சேர்ந்த திரு டோன் வீ கேட்­டி­ருந்த நாடா­ளு­மன்­றக் கேள்­விக்கு டாக்­டர் டான் எழுத்­து­பூர்­வ­மாக இவ்­வாறு பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

சமூக வருகை அனு­மதி அட்­டை­யைக் கொண்டு சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­த­வர்­கள் இவ்­வாறு உப­சரிப்­புப் பெண்­க­ளாக வேலை செய்­வது குடி­நு­ழை­வுச் சட்­டத்­தின்­கீழ் குற்­ற­மா­கும் என்று தெரி­வித்த டாக்­டர் டான், கேடிவி கிரு­மிக் குழு­மத்­தில் அத்­த­கைய பிரி­வி­னர் உள்­ள­னரா என்­ப­தைக் குறிப்­பி­ட­வில்லை. போலி­சா­ரும் வெவ்­வேறு அர­சாங்க அமைப்­பு­களும் விதி­மீறும் இரவு கேளிக்­கைக் கூடங்­க­ளுக்கு எதி­ராக அம­லாக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன. நிரந்­த­ர­மாக உரி­மத்தை ரத்து செய்­வது அதில் ஒன்று என்று டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

இர­வு கேளிக்கை விடு­தி­களில் சுய­மா­கக் கண்­கா­ணிப்­புப் பணி­களை மனி­த­வள அமைச்சு மேற்­கொள்­வ­தில்லை என்­றார் அமைச்­சர். இருப்­பி­னும், அனு­ம­திக்­கப்­ப­டாத நட­வ­டிக்­கை­களில் வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் ஈடு­பட்­டால் வேலை அனு­மதி அட்டை விதி­மு­றை­களின்­கீழ் மனி­த­வள அமைச்சு அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்று அமைச்சர் டான் விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!