செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
e335f212-4c66-4e9f-a70f-97f9403b6630
-

சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பு: மேம்படுத்த புதிய கூட்டணி

'எல்என்ஜி' எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவை சிங்கப்பூர் மேலும் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் கையாள புதிய திட்டம் ஒன்று உருவாகி வருகிறது. 'கெப்பல் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர்', 'சிங்கப்பூர் எல்என்ஜி கார்ப்பரேஷன்' (எஸ்எல்என்ஜி) ஆகியவற்றுடன் தொழில்துறை பங்காளி நிறுவனம் ஒன்றும் இணைந்து இத்திட்டத்திற்கான பொறியியல் வடிவமைப்பை ஜூரோங் தீவில் உள்ள 'எஸ்எல்என்ஜி'யின் முனையத்தில் செயல்படவுள்ளன.

இத்திட்டம் வழி சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பு மேம்படும் என்று கெப்பல், எஸ்எல்என்ஜி நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. நீடித்த நிலைத்தன்மையுடைய எரிசக்தி மற்றும் ரசாயன மையமாக ஜூரோங் தீவு உருமாறுவதற்கு இத்திட்டம் பங்களிக்கும் என்று நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

'நிதிவளத் தேவை, பொருளியல் சூழல் கருதி வரி உயர்த்தப்படும்'

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உட்பட எந்தவொரு வரி விகிதத்தையும் உயர்த்தும் காலகட்டத்தை நிர்ணயித்திட, அரசாங்கம் முதலில் சிங்கப்பூரின் நிதிவளத் தேவைகளையும் நிலவும் பொருளியல் சூழலையும் கருத்தில் கொள்ளும் என்றார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங். 2025ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியை சிங்கப்பூர் ஏழு விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடாக உயர்த்தவுள்ள நிலையில், பொருளியல் மீண்டுவரும் வரை அதைத் தள்ளிப் போடுமாறு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் சிலர் நேற்று முன்தினம் ஆலோசனை கூறினர். இருப்பினும் சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தின் சுகாதாரப் பராமரிப்பில் அதிகரித்து வரும் செலவினத்தையும் சமாளிக்க ஜிஎஸ்டியை உயர்த்துவது அவசியம் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.