ஆய்வு: கணினித்திரையைப் பார்ப்பதால் ஏற்படக்கூடிய வளர்ச்சிக் குறைபாடுகள்

ஆய்வு: கணினித்திரையைப் பார்ப்பதால் ஏற்படக்கூடிய வளர்ச்சிக் குறைபாடுகள்

1 mins read
18b62e54-9790-4440-979a-cb098196da0b
-

இரண்டு வய­துக்­குக் குறை­வான பத்­தில் ஒன்­பது குழந்­தை­கள், தின­மும் பெரி­ய­வர்­கள் கண்­காணிப்­பின்றி கணி­னித் திரை­களைப் பார்க்­கும்­போது, நாள­டை­வில் மொழித் தடை, கவ­னம் செலுத்த இய­லாமை போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வ­தாக ஆய்வு ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது.

கைய­டக்­கக் கணினி, திறன்­பேசி போன்ற மின்­சா­த­னங்­க­ளின் திரை­களை ஆறு மாதக் குழந்­தை­யாக இருக்­கும்­போதே பிள்­ளை­கள் பார்க்­கத் தொடங்­கி­விடு­கின்­ற­னர். அவர்­கள் அழா­மல் இருக்க ஆறு­தல் அளிக்­கும் வகை­யில் பெற்­றோர் சில­ரும் சாத­னங்­களைக் கையில் கொடுத்­து­வி­டு­கின்­ற­னர். இருப்­பி­னும், கடந்த 10 ஆண்­டு­க­ளாக நடத்­தப்­பட்ட ஆய்வு மூலம், இத்­த­கைய மின்­சா­த­னங்­களின் திரையை நீண்ட நேரம் பார்ப்­ப­தால் வளர்ச்­சிக் குறை­பாடு­கள் ஏற்­ப­டு­வ­தாக தெரிய வந்­துள்­ளது. உடல் பரு­மன், மன­நல பாதிப்பு ஆகிய சிக்­கல்­களும் ஏற்­படும் சாத்­தி­ய­முண்டு.