இளம்பிள்ளைகளின் உடல்நலம், மனநலம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி மேம்படுத்தும் நோக்கில் புதிய ஆய்வு நிலையம் ஒன்று திறக்கப்படவுள்ளது.
சுகாதாரம், கல்வி, சமூகவியல், மனோவியல், செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை இந்த ஆய்வு நிலையம் ஒருசேர இணைத்திடும் என்று கூறப்படுகிறது.
ஆசியாவிலேயே முதல்முறையாக இதுபோன்ற நிலையம் ஒன்று அமைக்கப்படுகிறது.
ஆய்வு நிலையம் நாளை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படும்.

