நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் இனி தடுப்பூசி

நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் இனி தடுப்பூசி

1 mins read
30da7536-afef-42da-8d0c-bce4af200ef2
-

கடும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களும் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை இனி போட்டுக்கொள்ளலாம் என்று கொவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர்க் குழு நேற்று தெரிவித்தது. கொவிட்-19 தொற்றால் ஏற்படக்கூடிய சிக்கல்களால் கூடுதல் அபாயத்தை எதிர்நோக்கும் இப்பிரிவினருக்குத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்று தரவுகள் கூறுவதாக குழு குறிப்பிட்டுள்ளது. மருத்துவர் கடிதம் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மேலும், கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தோர், தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொள்ளுமாறு குழு பரிந்துரை செய்துள்ளது.