சிங்கப்பூரில் 'போஷ்' நிறுவனத்தின் புத்தாக்க மையம்

சிங்கப்பூரில் 'போஷ்' நிறுவனத்தின் புத்தாக்க மையம்

2 mins read
72945072-5900-472c-a658-16ae8aefaf89
நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் முறையில் வளர்க்கப்பட்ட இறால்களுக்குஇரை போடுகிறார் துணைப் பிரதமர் ஹெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜெர்­மா­னிய நிறு­வ­ன­மான 'போஷ்', அதன் தென்­கி­ழக்­கா­சிய புத்­தாக்க மையத்தை சிங்­கப்­பூ­ரில் திறந்­துள்­ளது. இதன்­வழி புதிய நிறு­வ­னங்­களுக்கு வட்­டார ஒத்­து­ழைப்­புக் கட்­ட­மைப்பு ஒன்று உரு­வா­கும் என்று நிறு­வ­னம் எதிர்­பார்க்­கிறது.

நிறு­வ­னத்­தின் 'குரோ' என்ற இந்த புத்­தாக்­கத் தளம், சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் (இடிபி) கீழ் இயங்­கும் 'நியூ வென்ச்­சர்ஸ்' பிரி­வின் கூட்­ட­ணி­யில் அமைக்­கப்­பட்­டது.

புத்­தாக்க மையம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைக்­கப்­பட்­டது. 2023ஆம் ஆண்­டுக்­குள் குறைந்­தது ஐந்து புத்­தாக்­கத் திட்­டங்­களை மையம் தொடங்கி வைக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

'குரோ' திட்­டத்­தின்­கீழ் 'போஷ்' அதன் முதல் நீர்­வாழ் உயிர் வளர்ப்­பி­யல் நிறு­வ­னத்­தை­யும் துவங்­கு­வ­தாக அறி­வித்­தது. 'எக்­கு­வ­யீசி' என்ற அப்­பு­திய நிறு­வ­னம், 'போஷ்' மற்­றும் இடி­பி­யி­ட­மி­ருந்து பல மில்­லி­யன் மதிப்­பி­லான நிதி­யைப் பெற்­றுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

நீர்­வாழ் உயிர்­களை வளர்க்­கும் பண்­ணையை உரு­வாக்க வேண்­டும் என்ற 'எக்­கு­வ­யீசி'யின் திட்­டத்­திற்கு 'போஷ்' நிறு­வ­னத்­தின் உணரி உரு­வாக்க ஆற்­றல்­கள் கைகொ­டுத்­துள்­ளன. இதில் உணரி­கள், மென்­பொ­ருள், பகுப்­பாய்வு ஆகி­யவை பண்ணை விளைச்­சலை­யும் முன்­க­ணிப்­பை­யும் மேம்­ப­டுத்­து­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நீரின் தரம், இறால்­க­ளுக்­குப் போது­மான உணவு போன்­ற­வற்றை அறிய உத­வும் திட்­டம், சிங்­கப்­பூர் மட்­டு­மன்றி இந்­தோ­னீ­சியா, வியட்­னாம் நாடு­க­ளின் பண்­ணை­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தியா, தாய்­லாந்து போன்ற நாடு­க­ளி­லும் இத்­திட்­டத்தை விரிவு­ப­டுத்த எண்­ணி­யுள்­ள­தாக எக்­கு­வ­யீசி இணை நிறு­வ­னர் ஐவன் டே தெரி­வித்­தார்.

'குரோ' திட்­டத்­தின்­கீழ் கிட்­டத்­தட்ட 30 புத்­தாக்க தொழில் முனை­வர்­கள் வெவ்­வேறு புதிய பணித்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'குரோ' தொடக்க நிகழ்­வுக்கு துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வருகை அளித்­தி­ருந்­தார்.