2,000 தொழில்நுட்ப வேலைகள் உருவாகும்

2,000 தொழில்நுட்ப வேலைகள் உருவாகும்

2 mins read
50fcd090-a817-451d-8652-4fae09ec038e
குறைவான சம்பளம், மேல் நிலைக்குச் செல்ல வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களுக்காக பலர் வேலையில் ஆர்வமில்லாமல் வேலை செய்கின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நான்கு அனைத்துலக நிறுவனங்கள் இங்கு தளம் அமைக்கின்றன

சிங்­கப்­பூ­ரில் பொங்­கோல் மின்னி

லக்க வட்­டா­ரத்­தில் தளம் அமைப்­ப­தற்­கான தங்­கள் திட்­டங்­களை நான்கு அனைத்­து­லக நிறு­வ­னங்­கள் உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. இதன் மூலம் 2,000 தொழில்­நுட்ப வேலை­கள் உரு­வா­கும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த நான்கு நிறு­வ­னங்­களும் வெவ்­வே­றான ஆற்­றல்­களை இங்கு கொண­ரும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று தெரி­வித்­தார்.

டெல்ட்ரா எலக்ட்­ரா­னிக்ஸ் இண்ட்' 1 (சிங்­கப்­பூர்), போஸ்­டன் டைன­மிக்ஸ், குரூப்-1பி, வான்­சி­யாங் ஆகி­யவை அந்த நான்கு நிறு­வ­னங்­கள்.

பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டார இடத்­தில் நடந்த நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்ட அமைச்­சர், புத்­தாக்­கம், தொழில், ஆற்­றல் ஆகி­ய­வற்­றுக்­கான உலக மைய­மாக சிங்­கப்­பூர் திகழ்­வ­தைச் சுட்­டி­னார். இதன்­மூ­லம் அந்த நிறு­வ­னங்­கள் பலன் அடை­யும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அதே­போல் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றும் அவர் கூறி­னார்.

பொங்­கோ­லில் 50 ஹெக்­டர் நிலப்­ப­ரப்­பில் மின்­னி­லக்க வட்­டா­ரம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான அடிப்­படை திட்­டம் பற்றி 2018ல் அறி­விக்­கப்­பட்­டது. அந்த வட்­டா­ரம் 2024 முதல் படிப்­ப­டி­யா­கத் திறக்­கப்­படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் புதிய வளா­க­மும் அந்த வட்­டா­ரத்­தில் அமை­யும்.

இந்த வளா­கம் 10,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள், 500 ஊழி­யர்­களுக்­குச் சேவை­யாற்­றும். நிறு­வ­னங்­க­ளுக்­கும் மாண­வர்­கள், பொது­மக்­க­ளுக்­கும் உயி­ரோட்­ட­மிக்க மைய­மா­க­வும் பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரம் திக­ழும்.

அங்கு அவர்­கள் மின்­னி­லக்க மற்­றும் விவேக வாழ்­வுக்­கான தீர்வு­க­ளைப் பரி­சோ­தித்­துப் பார்க்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரின் அறி­வார்ந்த நாடு மற்­றும் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் திட்­டங்­க­ளை­யொட்டி, பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரத்­திற்­கு ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் திட்டமிட்­டது.