விரைவில் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி

விரைவில் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி

2 mins read
62be60d7-5999-4667-8a3f-a4acdfe23600
சினோஃபார்ம் தடுப்பூசியை மூன்று முதல் நான்கு வாரகால இடைவெளியில் இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19க்கு எதி­ரான 'சினோ­ஃபார்ம்' தடுப்­பூ­சியை சிங்­கப்­பூ­ரில் கூடியவிரை­வில் போட்­டுக்­கொள்­ள­லாம். பல தனி­யார் சுகா­தார பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் அந்தத் தடுப்­பூசி மருந்­தைப் பெறு­வ­தற்கு ஏற்­கெனவே முயற்­சி­ எடுத்­துள்­ளன.

இந்த ஊசி மருந்­தை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொரோனாவுக்கு எதிராக மொத்­தம் நான்கு தடுப்பூசி மருந்­து­க­ளுக்கு அனு­மதி கிடைத்­துள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக நடப்பில் உள்ள கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி பொரு­ளி­யலை மறு­ப­டி­யும் வழக்க நிலைக்­குக் கொண்டுவர விரும்­பும் சிங்­கப்­பூர், தடுப்­பூசி இயக்­கத்தை வேகப்­ப­டுத்தி வரு­கிறது.

'சிறப்பு வழி ஏற்­பாட்­டின்' கீழ் சினோ­ஃபார்ம் மருந்தை இறக்கு­மதி செய்ய ஐஎச்­எச் ஹெல்த்­கேர் சிங்­கப்­பூர் அமைப்­பிற்குச் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அங்­கீ­கா­ரம் வழங்கி இருக்­கிறது.

அந்த அமைப்பு இதைத் தெரி வித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மேலும் ஒரு தடுப்­பூசி வாய்ப்பு கிடைக்­கும் என்று அந்த அமைப்­பின் செய­லாக்­கத் துறை தலைமை அதி­காரி டாக்­டர் நோவல் இயோ கூறி­னார். மேலும் தக­வல்­கள் கிடைக்­கும்­போது அவற்றை வெளி­யி­டப்­போ­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, சினோ­ஃபார்ம் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள விரும்­பும் மக்­கள் தங்­க­ளைப் பதிந்துகொள்ளலாம் என்று ராஃபிள்ஸ் மருத்துவக் குழு­மம் ஃபேஸ்புக் மூலம் அறி­வித்­துள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னம், அவசர பய­னீட்­டுப் பட்­டி­ய­லில் அனு­ம­தித்­துள்ள கொவிட்-19 தடுப்­பூசி மருந்தை தனி­யார் சுகாதார ப­ரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­கள் இங்கு கொண்டு வர, அந்தச் சிறப்பு வழி ஏற்­பாடு அனு­ம­திக்­கிறது.

சீனா­வின் சினோ­வேக், சினோ­ஃபார்ம் ஆகி­ய­வை­யும் ஜான்­சன்& ஜான்­சன், ஆக்­ஸ்போர்ட்- ஆஸ்ட்ரா ஸெனிகா ஆகி­ய­வை­யும் அந்­த உலக நிறுவனப் பட்­டியலில் இடம்­பெற்று இருக்­கின்றன.

இவை ஒருபுறம் இருக்க, நொவா­வேக்ஸ் என்ற அமெ­ரிக்­கா­வின் உயி­ரி­யல் தொழில்­நட்ப நிறு­வ­னத்­து­டன் கொள்­மு­தல் உடன்­பா­டு­களில் முன்னதாகவே அதி­கா­ரி­கள் கையெ­ழுத்­திட்டு இருக்­கி­றார்­கள்.

இந்த நிறு­வ­னத்­தின் தடுப்­பூசி மருந்து அநே­க­மாக இந்த ஆண்­டின் இறு­திக்­குள் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த மருந்து அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டால் இது தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இடம்­பெ­றும். சிறப்பு வழி மூலம் அனு­ம­திக்­கப்­படும் தடுப்­பூசி மருந்­துக்கு அர­சாங்க மானி­யம் கிடைக்­காது.

தடுப்பூசி பாதிப்பு நிதி உதவி செயல்திட்டத்தில் அவை இடம்பெற மாட்டா.