அமைச்சர்: கொவிட்-19 கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் முடிவு மிகவும் சரியானது

சிங்­கப்­பூ­ரில் ஜூரோங் மீன்­பிடித் துறை­முக தொற்றுக் குழு­மம் தலைகாட்­டி­யதை அடுத்து அதி­காரி­கள் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடுமை­யாக்கினார்­கள். இல்லை எனில் இன்று நிலைமை மேலும் மோச­மடைந்து இருக்­கும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கட்­டுப்­பா­டு­கள் மறு­ப­டி­யும் கடு­மை­யாக்­கப்­பட்­டது பற்றி நாடா­ளு­மன்­ற­த்தில் உறுப்­பினர்கள் பல­ரும் செவ்­வாய்க்­கிழமை அதி­க­மான கேள்­வி­களை எழுப்­பினர். அவற்­றுக்­குப் பதில் அளித்த அமைச்­சர், கட்­டுப்­பா­டு களைக் கடுமை­யாக்­கி­யது சரி­யா­னது என்று முழுக்க முழுக்க தான் கரு­து­வ­தா­கக் கூறினார்.

கேடிவி பொழு­துபோக்­குக் கூடங்­கள் தொடர்­பான கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி 245 ஆக இருந்­ததை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதே­வே­ளை­யில், ஜூரோங் துறை­மு­கத் தொற்றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்டோர் ஏறக்குறைய 900 பேராக இருந்­த­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு உயிர்­வாயு சிகிச்சை அல்­லது தீவிர கண்­கா­ணிப்பு தேவைப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இந்த மாதத் தொடக்­க­த்தில் இருந்து மூன்­றரை மடங்கு அதி­க­மாகி இருப்­பதை­யும் திரு வோங் சுட்­டிக்­காட்­டி­னார். கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­க­வில்லை என்­றால் நிலைமை இன்­னும் மோச­ம­டைந்து இருக்­கும் என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் இன்­ன­மும் 200,000 முதியவர்­கள் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அவர் எடுத்­து­ரைத்­தார்.

இவர்­களில் பல­ரும் நோய்­வாய்ப்­பட்டு மர­ணத்­தைத் தழு­வக்­கூ­டிய ஒரு நிலையைச் சந்­திக்க நாம் தயாரா என்று கேட்ட அமைச்­சர், சிங்­கப்­பூ­ரில் இதைக் காணவா நாம் விரும்புகி­றோம் என்­றும் வினவினார்.

வருங்­கா­லத்­தில் தெள்­ளத்­தெளி­வாக வழி­காட்டி ஏற்­பா­டு­கள் தேவை என்று சில உறுப்­பி­னர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

அவர்­க­ளுக்­குப் பதில் அளித்த கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு வோங், தொற்று சூழ் நிலை கணிக்க முடி­யாத அள­வுக்கு ஏற்ற இறக்­க­மாக இருக்­கிறது, திடீர் திடீர் என்று மாறு­கிறது, மிக­வும் நிச்­ச­ய­மில்­லா­மல் இருக்­கி­ற­து­ என்று விளக்கினார்.

அடுத்­த­தாக என்ன நிக­ழும் என்­ப­தைக் கணிக்க முடி­ய­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கடும் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக ஒவ்­வொ­ரு­வ­ரும் சலிப்­ப­டைந்து ­விட்­ட­னர் என்­பதை தான் முற்­றி­லும் புரிந்­து­கொள்­வ­தா­கத் தெரி­வித்த அமைச்­சர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அதைப் புரிந்­து­கொள்­வார்­கள் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!