கேடிவி நிலையங்களுடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தை சிங்கப்பூர் கையாண்டவிதம் குறித்து நிக்கே ஏஷியாவில் வெளியான கட்டுரையின் முழுத் தகவல்களும் தவறாக இருப்பதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சின் மூத்த இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பிய மறுப்பு அறிக்கையில் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த திரு சேம் டீ, 'சிங்கப்பூரின் அண்மைய கிருமிப் பரவல் பின்னணியில் தோல்விகள்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கேடிவி நிலையங்களில் கள்ளப் பணத்தை மாற்றுவது மற்றும் சட்டவிரோத பாலியல் செயல்களில் குற்றக்கும்பல்கள் ஈடுபடுவதாகவும் கூறுவது தவறு என்றார்.
திரு ஆண்டி வோங் எழுதிய அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டது போல எந்தவித விளக்கமும் இல்லாமல் கேடிவி நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 23ஆம் தேதி அந்த நிதி நாளேட்டின் இணையப்பக்கத்தில் இந்தக் கட்டுரை வெளியானது.
"கேடிவி குழுமம் உடனே கட்டுப் படுத்தப்பட்டது. ஜூலை 22 முதல் 26 வரையில் ஒவ்வொரு நாளும் அதனுடன் தொடர்புடைய ஐந்து தொற்றுச் சம்பவங்களே பதிவாகின. அது, மேலும் குறைந்து வருகிறது. இம்மாதம் 22ஆம் தேதி அரசாங்கம் மீண்டும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியதற்கு அந்தக் குழுமம் காரணமல்ல. உணவுச் சந்தைகளில் புதிதாக ஏற்பட்ட புதிய கிருமிப் பரவலே அதற்குக் காரணம்," என்று திரு டீ சொன்னார்.
"சட்ட விரோத பாலியல் நடவடிக்கைகளுக்கு எதிரான உங்கள் ெசய்தியாளரின் உயரிய நிலைப்பாட்டை பாராட்டுகிறோம். ஆனால் பொதுக் கொள்கைகள் மீதான அவரது கருத்துகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், கற்பனை எண்ணங்களாகக் இருக்கக் கூடாது," என்றார். 200க்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்களுடன் கேடிவி குழு மத்துக்கு தொடர்புள்ளது என்று தனது கட்டுரையில் வோங் தெரிவித்திருந்தார்.
இத்தகைய கேடிவி நிலையங்களை உணவு நிலையங்களாக மாற்ற அனுமதித்திருக்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பி யிருந்தார். கேடுவிளைவிக்கும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன. ஆனால் கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அவற்றைத் தடுக்கத் தவறிவிட்டது. எல்லைக் கட்டுப்பாடு கொள்கைகளிலும் ஓட்டை இருப்பதாகவும் வோங் கட்டுரையில் கூறியிருந்தார். குடும்பத் தொடர்பு இருப்பதாக பொய்யாகக் கூறி வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித் திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த திரு டீ, குற்றச்செயல் கும்பல்களை ஒடுக்கவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்று வது, ஆள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.
குற்றக் கும்பல் நடவடிக்கைகள் மிகக்குறைவாக உள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. 2020 உலக ளாவிய சட்டம், ஒழுங்கு அறிக்ைக யில் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக சட்ட, ஒழுங்கில் சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்ப தை திரு டீ சுட்டிக்காட்டினார்.
கேடிவி நிலையங்களுக்குச் செல்லும் பாலியல் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்வதை அரசாங்கம் அறிந்துள்ளது. இத்தகைய இடங் களில் மக்கள் சந்திப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் அந்த இடங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடு படுவது உரிமம் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுவதாகும். இத்தகைய மீறல்கள் வழக்கமான அமலாக்க நடவடிக் கைகள் மூலம் ஒடுக்கப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை (2020) போலிசார் 3,000 இரவு கேளிக்கை விடுதிகளை சோதனையிட்டு ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு வருகை யாளர்களை வரவேற்கிறோம். அதே சமயத்தில் சிலர் பாலியல் தொழி லுக்காக நுழைகின்றனர். ஆனால் நாட்டுக்குள் நுழையும் நிபந்தனை களில் இதற்கு அனுமதியில்லை.கேடிவி நிலையங்கள் உணவு, பானம் விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது என்றார் திரு சேம் டீ.

