சிைறத் தண்டனை அனுபவித்தும் பாடம் கற்றுக்கொள்ளாத முதியவருக்கு மீண்டும் சிறை

மான­பங்க வழக்­கு­களில் 2018ல் அடிக்­கடி சிறைக்­குச் சென்று திரும்­பிய சக்­கர நாற்­காலி முதி­ய­வர் மீண்­டும் சிறை­யில் அடைக்கப் பட்டார். இம்­முறை 11 வயது சிறுமி உட்­பட இரு­வரை அவர் மான­பங்­கப்­ப­டுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ர­ரான போ செங் கியா­னுக்கு வயது 86. சரி­வர காது கேட்­காது. இந்த நிலை­யில் மான­பங்­கக் குற்­றச்செயல்களில் ஈடு பட்ட அவருக்கு கடந்த ஆண்டு 18 வாரச் சிறைத் தண்­ட­னை விதிக்கப்பட்டது. அதை அனுப வித்தும் பாடம் கற்­றுக்­கொள்­ளாத அவர், மீண்­டும் இரு­வரை மான­பங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

நேற்று நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யில் அவர் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக் கொண்­டார். நீதி­மன்­றத்­தில் வழக்­க­றி­ஞ­ர் யாரும் அவ­ரைப் பிரதி­ நி­திக்­க­வில்லை.

தமக்கு வய­தா­கி­விட்­ட­தா­க­வும் இறக்­கும் தறு­வா­யில் இருப்­ப­தா­லும் சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக அப­ரா­தம் விதிக்க வேண்­டும் என்று திரு போ கேட்­டுக் கொண்­டார்.

ஆனால் அதனை ஏற்­றுக் கொள்ள மறுத்த நீதி­பதி, போவை பத்து மாதம் சிறை­யில் அடைக்க உத்­த­ர­விட்­டார்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் 23ஆம் தேதி பேருந்துச் சேவை எண் 30ல் பய­ணம் செய்த அவர், இருக்­கை­யில் அமர்ந்­து தமக்கு அரு­கில் நின்­று­கொண்­டி­ருந்த 27 வயது பெண்­ணின் முழங்­கையை உர­சி­னார்.

பின்­னர் அந்­தப் பெண்­ணுக்கு அருகே சிறிய படிக்­கட்­டில் நின்­று­கொண்டு, தவறி மேலே விழு­வ­தைப் போல நடித்து அந்­தப் பெண்­ணின் தொடை­யைத் தொட்­டார். இதை­ய­டுத்து அந்­தப்­பெண் போலி­சில் புகார் செய்­தார்.

மார்ச் 11ஆம் தேதி நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில் பேருந்து சேவை எண் 98ல் ஏறி 11 வயது சிறு­மி­யின் பக்­கத்­தில் அமர்ந்­தார்.

பின்­னர் கைத்­த­டியை சிறு­மி­யின் மடி­யில் வைத்து மான­பங்­கப்­ப­டுத்­தி­னார். இத­னால் அதிர்ச்­சி­ய­டைந்த சிறுமி கைத்­த­டி­யைத் தள்­ளி­விட்­டார்.

வீட்­டுக்­குச் சென்று பேருந்­தில் நடந்­ததை தாயா­ரி­டம் சிறுமி கூறி­ய­தால் போ மீது ஜூரோங் போலிஸ் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!