மின்வர்த்தகப் பொருட்களை கண்காணிக்கும் சுகாதார அறிவியல் ஆணையம்

மின்வர்த்தகப் பொருட்களை கண்காணிக்கும் சுகாதார அறிவியல் ஆணையம்

1 mins read
cf06c50b-9f73-41a7-b11f-9a2e03481946
-

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், இணை­யம் வாயி­லாக விற்­கப்­படும் சட்­ட­வி­ரோ­தப் பொருட்­களை தடுத்து நிறுத்­து­ம் முயற்சி யாக புதிய கண்­கா­ணிப்பு முறையை மும்­மு­ர­மாக சோதித்து வரு­கிறது.

ஹோம் டீம் சைன்ஸ் அண்ட் டெக்­னா­லஜி முகவை, இந்தக் கண்­கா­ணிப்பு முறையை உரு­வாக்­கி­யுள்­ளது.

இதில் தானி­யக்க செயல்­முறை மற்­றும் செயற்கை நுண்­ணறிவு தொழில்­நுட்­பங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இது, இணை­யத்­தில் விற்­கப்­படும் பொருட்­க­ளின் பட்­டி­யலை ஊடு­ருவி சட்­ட­வி­ரோ­தப் பொருட்­களை அடை­யா­ளம் காணும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

சட்­ட­வி­ரோத மருந்­து­கள், சுகா­தா­ரப் பொருட்­கள் தவிர ஒப்­ப­னைப் பொருட்­களும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யி­லி­ருந்து மே மாதம் வரை­ சோதனை கட்­டத்­தில் உள்­ளூர் மின்­வர்த்­தகத் தளங்­க­ளி­லி­ருந்து 3,200க்கும் மேற்­பட்ட சட்­ட­வி­ரோ­தப் பொருட்­கள் அகற்­றப்­பட்­ட­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

அம­லாக்க அதி­கா­ரி­கள் சட்­ட­வி­ரோ­தப் பொருட்­களை ஆராய்ந்து அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்தனர்.

புதிய கண்­கா­ணிப்பு முறை நல்ல பலன் அளித்­துள்­ளது.

சில வாரங்­கள் தேவைப்­படும் வேலையை சில மணி நேரங்­களில் முடித்­து­வி­டு­வ­தாக சுகாதார அறிவியல் ஆணையம் குறிப் பிட்டது.