மின்னேற்றிகள்; பிரஞ்சு நிறுவனம் வாங்குகிறது

மின்னேற்றிகள்; பிரஞ்சு நிறுவனம் வாங்குகிறது

1 mins read
10921abd-42ef-4737-a9d3-ed09893a7fa8
புளுஎஸ்ஜி மின்னேற்றும் நிலையங்களை பிரஞ்சு நாட்டின் மாபெரும் எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் ஏற்று நடத்த விருக்கிறது. படம்: டோட்டல் எனர்ஜிஸ் -

அண்­மை­யில் தனது மின்­சார கார் பகிர்வு நிறு­வ­னத்தை விற்ற புளு­எஸ்ஜி, தனது ஆகப்­பெ­ரிய மின்­னேற்றி கட்­ட­மைப்­பை­யும் விற்க முன்­வந்­துள்­ளது.

புளு­எஸ்ஜி நிறு­வ­னத்தை நடத்­தும் பிரஞ்சு பொறி­யி­யல் குழு­ம­மான போலோர், பிரஞ்சு எண்­ணெய் நிறு­வ­ன­மான 'டோட்­டல்' நிறு­வ­னத்­துக்கு மின்­னேற்றி கட்­ட­மைப்பை விற்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தது.

இதனை புளு­எஸ்­ஜி­யின் தலைமை நிர்­வாகி ஃபிராங்க் விட்டே நேற்று உறுதி செய்­தார்.

ஆனால் விற்­பனை விவ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை.

புளு­எஸ்ஜி, சிங்­கப்­பூர் முழு­வ­தும் 1,500 மின்­னேற்றி நிலை­யங்­களை வைத்­துள்­ளது. இது, சிங்­கப்­பூ­ரில் தனி­யார் நிறு­வ­னம் ஒன்று வைத்­தி­ருக்­கும் ஆகப்­பெ­ரிய மின்­னேற்றி கட்­ட­மைப்­பா­கும்.

நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் சலு­கை­யின் கீழ் அந்­தக் கட்­ட­மைப்பை புளு­எஸ்ஜி நடத்­தி­வந்­தது.

இது பற்றி கருத்து அறிய முயற்சி செய்­த­போது டோட்­டல் நிறு­வ­னத்­து­டன் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

தற்­போது ஷெல் மற்­றும் கால்­டெக்ஸ் நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் குறிப்­பிட்ட இடங்­களில் மின்­னேற்­றும் சேவை­யை வழங்கி வரு­கின்­றன.

கடந்த பிப்­ர­வரி மாதம் புளு­எஸ்ஜி தனது கார்ப் பகிர்வு சேவை நிறு­வ­னத்தை உள்­ளூர் நிறு­வ­ன­மான கோல்­பெல்­லுக்கு விற்­கப் போவ­தாக அறி­வித்­தது. இந்த விற்­பனை ஆகஸ்டு மாதம் நிறை­வே­ற­வி­ருக்கிறது.