துப்புரவுப் பணிகள் தீவிரம்

துப்புரவுப் பணிகள் தீவிரம்

1 mins read
0444aeac-fd5e-4058-902a-0965b361bae9
ஏறத்­தாழ 180 மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் புதிய துப்­பு­ர­வுப் பணி செயல்­மு­றையை இன்று முதல் கடைப்­பி­டிக்­கின்­றன.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டி­யவர்­கள் உள்ள இடங்­க­ளி­லும் கூட்­டம் அதி­கம் உள்ள இடங்­க­ளி­லும் துப்­பு­ர­வுப் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் புதிய துப்­பு­ர­வுப் பணி செயல்­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னைத் தொடர்ந்­து ­தா­திமை இல்­லங்­கள், பள்­ளி­கள், காப்­பிக்­

க­டை­கள் போன்ற இடங்­கள் புதிய அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

முதல் ஆறு மாதங்­கள் அறி­

மு­கக் கால­கட்­ட­மாக எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

புதிய துப்­பு­ர­வுப் பணி விதி­

மு­றையை நன்கு புரிந்­து­கொண்டு அதன்­படி செயல்­பட பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள இடங்­க­ளுக்கு இது ஒரு வாய்ப்­பாக அமை­யும்.

வெவ்­வேறு துறைக்கு இந்த அறி­மு­கத் திட்­டம் படிப்­ப­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

உதா­ர­ணத்­துக்கு ஏறத்­தாழ 180 மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் புதிய துப்­பு­ர­வுப் பணி செயல்­

மு­றையை இன்று முதல் கடைப்­

பி­டிக்­கின்­றன.

கிட்­டத்­தட்ட 1,100 காப்­பிக்­க­டை­கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து புதிய விதி­மு­றைக்கு உட்­பட்டு செயல்­பட இருக்­கின்­றன.

திட்­டத்­துக்கு உட்­படும் இடங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளைக் கட்­டாய இரண்டு நாள் சுற்­றுப்­பு­றக் கட்­டுப்­பாடு ஒருங்­கி­ணைப்­பா­ளர் பயிற்­சிக்கு அனுப்ப வேண்­டும்.

இது­வரை அப்­ப­யிற்­சியை 350 பேர் முடித்­து­விட்­ட­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர் மூத்­தோர் பரா­ம­ரிப்பு, இளை­யர், சமூ­கச் சேவை நிலை­யங்­களில் பணி­பு­ரி­ப­வர்­கள்.