பாதுகாக்கப்படும் இயற்கை அழகுடன் குடியிருப்புப் பேட்டை

பாதுகாக்கப்படும் இயற்கை அழகுடன் குடியிருப்புப் பேட்டை

1 mins read
22e0793d-8dea-4509-a11d-2316c157f12d
-

டோவர் வனப்­ப­கு­திக்­கான திட்­டம் மறு­ஆய்வு செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த வட்­டா­ரத்­தின் கிழக்­குப் பகுதியில் அடுத்த ஆண்டு

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புப் பேட்டை தயா­ரா­கி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேற்­குப் பகு­தி­யில் இயற்கை எழில்­மிக்க வனப்­ப­குதி பாது­காக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முத­லில் மேற்­குப் பகு­தி­யில் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள் கட்ட திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அதன் முக்­கி­யத்­து­வத்தை அறி­வி­யல் ஆய்­வு­களும் இயற்கை ஆர்­வ­லர்­களும் சுட்­டிய பிறகு அதைப் பாது­காக்க முடி­வு­எடுக்­கப்­பட்­டுள்­ளது.

"தற்­போ­தைய தலை­மு­றை­யி­ன­ரின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வது எங்­கள் கடமை. அதேபோல எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்­குத் தேவை­யான வளங்­க­ளைப் பாது­காப்­ப­தும் மிக­வும் முக்­கி­யம்," என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

டோவர் வனப்­ப­கு­தி­யின் மேற்­குப் பகு­தி­யில் பல்­லு­யிர் அம்­சங்­கள் வள­மாக இருப்­பது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­தது. கிழக்­குப் பகுதி­ யை­விட அங்கு பெரிய மரங்­களும் அரு­கி­வ­ரும் உயி­ரி­னங்­களும் இருப்­பது தெரி­ய­வந்­தது.

இரண்­டா­வது ஆய்வை தேசிய பூங்­காக் கழ­கம் நடத்­தி­யது. அதில் நிபு­ணர்­க­ளின் ஆலோ­சனை நாடப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் மற்ற வனப்­ப­கு­தி ­க­ளு­டன் டோவர் வனப்­ப­குதி எவ்­வாறு இணை­கிறது என்­பது குறித்து ஆரா­யப்­பட்­டது.

புக்­கிட் தீமா வனப்­ப­கு­தி­யி­லி­ருந்து டோவர் வனப்­ப­கு­திக்­குச் செல்­லும் வன­வி­லங்­கு­களுக்கு அது முக்­கி­ய­மான பாதை என்று

ஆய்­வில் தெரிய வந்­தது.