கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட திருமணங்கள்; இலவச சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட திருமணங்கள்; இலவச சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

2 mins read
1f8a634a-2210-4827-af63-6ed1ffe29715
-

அண்­மைய கொவிட்-19 கட்­டுப்­பாட்டு ­க­ளால் பாதிக்­கப்­பட்ட திரு­ம­ணங்­கள் தொடர்­பா­கத் தம்­ப­தி­ய­ருக்­கும் திரு­ம­ணச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடையே சட்ட அமைச்­சால் வழங்­கப்­படும் இல­வச சம­ர­சப் பேச்­சு­வார்த்தை மேலும் இரண்டு மாதங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த சில வாரங்­க­ளாக சமூக அள­வி­லான பாதிப்பு அதி­க­ரித்­தி­ருப்­பதை அடுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

கடந்த மே மாதம் 8ஆம் தேதிக்­கும் இம்­மாத இறு­திக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் நடை­பெற இருந்த திரு­ம­ணங்­க­ளுக்கு மட்­டும் இந்த இல­வச சம­ர­சப் பேச்­சு­வார்த்தை வழங்­கப்­படும் என்று முத­லில் அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் கடந்த மே மாதம் 8ஆம் தேதிக்­கும் வரும் செப்­டம்­பர் மாதம் 30ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் நடை­பெ­றும் திரு­

ம­ணங்­களும் இச்­சேவை வழங்­கப்­படும் என்று தற்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இல­வச சம­ர­சப் பேச்­சு­வார்த்தை சேவை­யைப் பெற விரும்­பு­வோர் சேவை நிறு­வ­னங்­க­ளு­டன் செய்­து­ கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­க­ளு­டன் தங்­கள் விண்­ணப்­பங்­களை இணை­யம் வழி சட்ட அமைச்­சி­டம் அக்­டோ­பர் 31ஆம் தேதிக்­கும் சமர்ப்­பிக்­க­லாம்.

விண்­ணப்­பம் சமர்ப்­பிக்­கப்­பட்ட இரண்டு வாரங்­க­ளுக்­குள் சம­ர­சப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த அமைச்சு இலக்கு கொண்­டுள்­ளது. சம­ர­சப் பேச்­சு­வார்த்தை இணை­யம் வழி ஏறத்­தாழ இரண்டு மணி நேரத்­துக்கு நடத்­தப்­படும்.

தற்­போது திரு­மண விருந்­து­ப­ச­ரிப்­பு­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தி­லும் நடை­மு­றைப்­

ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக முன்பு போல பலர் கலந்­து­கொள்ள முடி­யாது.

இத­னால் திரு­ம­ணம் செய்­து­கொள்ள இருந்த தம்­ப­தி­யர் பலர் தங்­கள் திட்­டங்­களை மாற்றி அமைக்­கும் நிலை ஏற்­பட்­டது. இதன் கார­ண­மாக அவர்­கள் ஏற்­கெ­னவே ஒப்­பந்­தம் செய்­து­கொண்ட நிறு­வ­னங்­க­ளு­டன் அவர்­க­ளுக்­குத் தக­ராறு ஏற்­பட்­டது. இல­வச

சம­ர­சப் பேச்­சு­வார்த்­தைத் திட்­டத்­தின்கீழ் பங்­கெ­டுக்க இரு­த­ரப்

­பி­னரும் இணங்­கி­னால் சட்ட அமைச்­சால் நிய­மிக்­கப்­பட்ட பயிற்சி பெற்ற நிபு­ணர் ஒரு­வர், நீதி­

மன்­றத்­துக்­குச் செல்ல தேவை எழா­மல் தீர்வு காண உதவி செய்­வார்.