பொங்கோல் தொடக்கப்பள்ளி கொவிட்-19 குழுமம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

பொங்கோல் தொடக்கப்பள்ளி கொவிட்-19 குழுமம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

2 mins read
047df1ee-250b-4369-9518-3896364ecb36
-

பொங்­கோல் தொடக்­கப்­பள்­ளி­யைச் சேர்ந்த அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­படும். இந்­தப் பரி­சோ­தனை நேற்று தொடங்கி இன்­று­டன் முடி­வ­டை­கிறது.

பொங்­கோல் தொடக்­கப்­பள்­ளி­யில் பணி­பு­ரி­யும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர் தொடர்­பு­டைய புதிய கொவிட்-19 குழு­மம் அடை­யா­ளம் காணப்­பட்­டதை அடுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

அந்­தக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 7ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­தது. அப்­பள்ளி நேற்று முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை வீட்­டி­லி­ருந்து பாடம் கற்­கும் அணு­கு­மு­றை­யைக் கையாள்­கிறது.

ஆசி­ரி­யர் ஒரு­வ­ருக்­கும் இரண்டு மாண­வர்­க­ளுக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பொங்­கோல் தொடக்­கப்­பள்ளி நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளு­டன் அந்த ஆசி­ரி­யர் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தில்லை என்று பள்ளி கூறி­யது. பொங்­கோல் தொடக்­கப்­பள்ளி கொவிட்-19 குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடர்­பில் இருந்­த­னரா என்

­ப­தைக் கண்­டு­பி­டிக்க விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த அன­னை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சு கூறி­யது. பொங்­கோல் தொடக்­கப்­பள்ளி முழு­வ­தும் சுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. நிலைமை தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யது. அப்­பள்­ளி­யின் மாண­வர்­கள், ஊழி­யர்­கள் ஆகி­யோர் உடல்­ந­லத்­து­டன் இருப்­பதை உறுதி செய்ய பள்­ளி­யு­ட­னும் பெற்­றோ­ரு­ட­னும் இணைந்து செயல்­பட இருப்­ப­தாக அது தெரி­வித்­தது.

"மாண­வர்­கள், பள்ளி ஊழி­யர்­கள் ஆகி­யோர் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வரை நாட வேண்­டும். அவர்­கள் தொடர்ந்து சுகா­தா­ர­மிக்க பழக்­க­

வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும். நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்ள வேண்­டும்," என்று கல்வி அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பள்­ளி­யில் முதன்­மு­த­லாக கடந்த மே மாதம் 21ஆம் தேதி­யன்று கொவிட்-19 கிருமி பர­வி­யது. ஆங்­கிலோ சீனத் தொடக்­கப்­பள்­ளி­யைச் சேர்ந்த இரண்டு மாண­வர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.