பல்வகை பாலினப் பாகுபாடுகளை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மகளிருக்கான செயல், ஆய்வுச் சங்கம் (அவேர்) அழைப்பு விடுத்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், ஒற்றைத் தாய்மார்கள், உடற்குறைஉள்ள பெண்கள், பணிப்பெண்கள், 'எல்ஜிபிடிகியூ' சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், முஸ்லிம் பெண்கள் ஆகியவற்றுக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர அது குரல் கொடுத்துள்ளது.
பாகுபாடுகளுக்கு எதிரான முழுமையான சட்டங்கள் அவசியம் என்று அவேர் அமைப்பு கூறியது. வேலையிடத் துன்புறுத்தல்
களுக்கு எதிராக முதலாளிகள் நடவடிக்கை எடுப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஒரே மாதிரியான வேலைக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரே அளவிலான சம்பளத்தைத் தர வேண்டும் என்று அவேர் அமைப்பு தனது கருத்தை முன்வைத்தது.
பாலினச் சமத்துவத்துக்கு அழைப்பு விடுத்து 88 பரிந்துரைகள் கொண்ட 292 பக்க அறிக்கையை அரசாங்கத்திடம் அவேர் அமைப்பு சமர்ப்பித்தது.
இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் வெள்ளை அறிக்கையில் இது இடம்பெறும்.
விதிமுறைக்கு உட்படா முதலாளிகளுக்கு எதிராக நட
வடிக்கை எடுக்க தேசிய கண்காணிப்புக் குழுவான நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என அவேர் அமைப்பு அறிவுறுத்தியது.
வேலையிடங்களில் பெண்
களுக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்கொள்ளும் திட்டம் கர்ப்
பிணிப் பெண்கள், தாய்மார்கள் ஆகியோர் மீது மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்று அவேர் கேட்டுக்கொண்டது.
மாறாக, உடற்குறையுள்ள பெண்களுக்கு உதவி செய்வ
திலும் அது கவனம் செலுத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
வேலை கிடைப்பது, அதில் நிலைத்திருப்பது, படிப்படியாக முன்னேறுவது ஆகியவற்றில் உடற்குறையுள்ள பெண்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்குவதாக அவேர் கோடிட்டுக் காட்டியது.
சிங்கப்பூரர்களின் வெளிநாட்டுக் கணவர் அல்லது மனைவிக்கு நீண்டகால குடிநுழைவு அட்டை வழங்குவற்கான தகுதிநிலையை மேலும் வெளிப்படையானதாக்க வேண்டும் என்று அவேர் பரிந்துரை செய்தது.
சிங்கப்பூர் நிரந்தரவாசம், சிங்கப்பூர் குடியுரிமை ஆகியவற்றைப் பெறுவதற்கான தெளிவான கால அட்டவணையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவேர் கேட்டுக்கொண்டது.
நீண்டகால குடிநுழைவு அட்டை வைத்திருப்போர் வேலை செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அது கூறியது. வெளிநாட்டுப் பணிப்பெண்
களுக்கான வேலை நேரமும் ஓய்வு நேரமும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
முதலாளிகளைத் தடையின்றி மாற்றிக்கொள்ளும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவேர் கூறியது.
ஒற்றைத் தாய்மார்கள் வீடு வாங்குவதில் சவால்கள் இருப்பதை அது சுட்டியது. திருமணமாகாத ஒற்றைத் தாய்மார்களும் அவர்களது பிள்ளைகளும் தற்போது நடப்பில் உள்ள வீடமைப்புத் திட்டங்களுக்குத் தகுதி பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, திருமணமாகாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் குழந்தை போனஸ், வரி நிவாரணம் ஆகியவற்றுக்குத் தகுதி பெறுவதில்லை.
அனைத்து வேலையிடங்களிலும் பாரம்பரிய தலைப்பாகை அணிந்துகொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவேர் அமைப்பு கேட்டுக்கொண்டது.


