ஆங்கிலம் அறியா வேலையிட நண்பர்களுக்கு உதவிக்கரம்

ஆங்கிலம் அறியா வேலையிட நண்பர்களுக்கு உதவிக்கரம்

1 mins read
258a9bb9-29d6-41c1-a90a-6cfe453fe973
விருது பெற்ற திரு சின்னையா பிரபு. படம்: திமத்தி டேவிட் -

வேலை நண்­பர்­கள் சில­ரால் ஆங்­கி­லத்­தில் இருந்த கட்­டளை­க­ளைப் புரிந்­து­கொள்ள முடி­யா­த­தைக் கண்­டார் திரு சின்­னையா பிரபு. 'ஆர்­சி­வய்' என்ற பொறி­யியல் ஆலோ­சனை நிறு­வனத்­தில் உத­விப் பாது­காப்பு மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு சின்­னையா பிரபு, சிர­மப்­படும் இப்­பிரி­வி­ன­ருக்கு உதவ வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார்.

வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத் தக­வல்­கள் போன்­ற­வற்றை அவ­ர­வர் தங்­க­ளின் தாய்­மொழி­யில் படித்­துப் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக இவர் நூல­கங்­க­ளைத் துவங்­கி­னார்.

முக்­கி­ய­மான வேலை­யிட அம்­சங்­கள் குறித்து வேலை நண்­பர்­க­ளால் தங்­க­ளின் அறி­வைப் பெருக்­கிக்­கொள்ள முடிந்­த­து­டன் நூல­கங்­களில் அவர்­களால் ஓய்­வாக படித்­துப் பொழு­தைக் கழிக்­க­வும் வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தித் தரப்­பட்­டன.

தமது முயற்­சிக்­காக 36 வயது திரு சின்­னையா பிர­பு­வுக்கு நேற்று 'பிஸ்­சேஃப் சாம்­பி­யன்' விருது வழங்­கப்­பட்­டது. ஒரு நிறு­வ­னத்­தின் ஆபத்து நிர்­வாக ஆற்­றலை அதி­கப்­ப­டுத்­தும் நபர்­களுக்கு இது வழங்­கப்­ப­டு­கிறது.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே இந்த நூலக யோசனை தமக்­குத் தோன்­றி­ய­தா­கப் பகிர்ந்­து­கொண்ட திரு சின்­னையா பிரபு, பாது­காப்பு, சுகா­தா­ரத் தரத்தை நிறு­வ­னத்­தில் தக்­க­வைத்­திட மேலும் பல புத்­தாக்க வழி­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும் என்­ப­தற்கு இவ்­வி­ருது தமக்கு உந்­து­த­லாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.