வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம்

வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம்

2 mins read
634522ed-c8b6-4435-b9b8-a305cb57a4cb
-

முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் தங்­க­ளின் வேலை­யி­டப் பாது­காப்­பை­யும் சுகா­தார நலத் திட்­டங்­களை­யும் மேம்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் கூறி­யுள்­ளார். ஊழி­யர்­கள் காய­ம­டை­வ­தும் அவர்­க­ளுக்கு உயி­ரி­ழப்பு நேர்­வ­தும் கொவிட்-19 தாக்­கத்­தி­லி­ருந்து நிறு­வ­னங்­கள் மீண்­டு­வ­ரு­வ­தற்­குத் தடை­யாக இருக்­கும் என்­றார் அவர்.

வேலை­யி­டத்­தில் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு மேல், நிறு­வனங்­கள் தங்­க­ளின் வேலை­யி­டப் பாது­காப்பு மற்­றும் சுகா­தார நலத் திட்­டங்­க­ளைக் கொள்­ளை­நோய்க்கு இடை­யே­யும் தொடர வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார். அப்­போ­து­தான் வேலை­யி­டங்­களில் கலந்­து­ற­வா­டல்­க­ளைக் கட்­டுப்­படுத்­த­வும் ஊழி­யர்­க­ளி­டையே கொவிட்-19 பர­வு­வ­தைத் தடுக்­க­வும் முடி­யும் என்­றார் அவர்.

"நிறு­வ­னங்­கள் இயங்கவும் வெற்றிபெறவும் நம் ஊழி­யர்­க­ளி­டத்­தில் பரிவு காட்­டு­வது முக்­கியம்," என்­றார் டாக்­டர் டான்.

அதற்­காக கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து பாது­காப்­பது போதாது என்­றும் வேலை­யிட விபத்­து­க­ளி­லி­ருந்து பாது­காத்­தல் வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பொதுப் பிரிவு சார்ந்த கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­குத் தகு­தி­பெற, பாது­காப்பு நிபந்­த­னை­களை அறி­மு­கம் செய்­வது குறித்­துத் தம் அமைச்சு ஆராய்­வ­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார். இது தொடர்­பில் கூடு­தல் விவ­ரங்­கள் பின்­னா­ளில் வெளி­யி­டப்­படும்.

வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம் ஏற்­பாடு செய்­தி­ருந்த மெய்­நி­கர் விருது நிகழ்ச்­சி­யின்­போது அமைச்­சர் டான் இத்­த­க­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார். உயி­ரைப் பறித்த வேலை­யிட விபத்து­க­ளின் எண்­ணிக்கை இவ்­வாண்டு அதி­க­ரித்­துள்­ளது.

ஆண்­டின் முதல் பாதி­யில் 23 உயி­ரி­ழப்­புச் சம்­ப­வங்­கள் வேலை­யி­டங்­களில் நிகழ்ந்­துள்­ளன. சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் எண்­ணிக்கை 16ஆக இருந்­தது.

அமைச்­சர் தம் உரை­யில் ஊழி­யர்­க­ளின் மன­ந­லம் குறித்த முக்­கி­யத்­து­வம் பற்­றி­யும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அடுத்த ஆண்டு முதல் புதி­தாக சேர்க்­கப்­படும் விருது ஒன்று, வேலை­யிட மன­ந­லம் தொடர்­பில் வழங்­கப்­படும் என்று கூறப்­பட்­டது. வேலை­யி­டத்­தில் மன­நல மீள்­திறனை வளர்க்­கும் நிறு­வ­னங்­களுக்­கும் நபர்­க­ளுக்­கும் இவ்­விருது வழங்­கப்­படும்.

"வேலை, வாழ்க்கை இரண்­டை­யும் பிரித்­துப் பார்க்க முடி­யா­மல், சமூக அள­வில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு, வேலை மற்­றும் நிறு­வனத்­தின் முன்­னேற்­றம் குறித்து நிச்­ச­யமற்ற நிலையை உரு­வாக்­கிய கொவிட்-19 சூழல், மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­தி­விட்­டது," என்­றார் அமைச்­சர் டான்.