வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் சேவையை சிங்கப்பூரின் 12 சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன. ஆனால், அந்த மருத்துவரிடம் முறையான வேலை அனுமதி அட்டை இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் 12 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
'புரோஹெல்த் மெடிக்கல் குருப் @ எல்ஆர்டி ஃபெர்ன்வேல்', 'ஹெல்த்வே மெடிக்கல் குருப்', 'மை ஃபேமிலி கிளினிக்' (ஹவ்காங் சென்ட்ரல்), 'மை ஃபேமிலி கிளினிக்' (ஆர்வி), 'மை ஃபேமிலி கிளினிக்' (டிஎச்), 'ஐஹெல்த்', 'அவெர்மெட்', 'சிஎம்ஐ ஹெல்த் செர்வீசஸ்', 'சிஎம்ஐ லைஃப்மெட்', 'ஹெல்த் 2.0', 'சில்வர்குரோஸ் ஹெல்த்கேர்', 'பசிபிக் ஃபேமிலி கிளினிக்' ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பிறப்பிக்கப்பட்டது.
நிறுவனங்களில் 'மை ஃபேமிலி கிளினிக்' (ஹவ்காங் சென்ட்ரல்) கிளைக்கு ஆக அதிகமாக, எட்டு குற்றச்சாட்டுகள் பிறப்பிக்கப்பட்டன. 'புரோஹெல்த் மெடிக்கல் குருப் @ எல்ஆர்டி ஃபெர்ன்வேல்', 'பசிபிக் ஃபேமிலி கிளினிக்' இரண்டும் குற்றங்களை ஒப்புக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

