தலைசிறந்த பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் சிங்கப்பூரர், கழிவறைகள் உட்பட பல இடங்களில் பெண்களைத் தகாத முறையில் படம் பிடித்துள்ள குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
தற்போது 23 வயதுடைய அந்த ஆடவர், அடையாளம் காணப்பட்ட 11 பெண்களையும் அடையாளம் அறியப்படாத ஒருவரையும் இவ்வாறு காணொளியில் பதிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.
ஆடவர் புரிந்த குற்றங்கள் தொடர்பில் 2016க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் போலிசாருக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து, ஆடவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
தகாத முறையில் எடுக்கப்பட்ட 16 காணொளிப் படங்கள், பெண்கள் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட 124 படங்கள் ஆகியவற்றை ஆடவரின் ஏழு சாதனங்களிலிருந்து போலிசார் கைப்பற்றினர்.
அடுத்த மாதம் ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

