தனிமை உத்தரவில் இருந்த நண்பரைச் சந்தித்தார்

தனிமை உத்தரவில் இருந்த நண்பரைச் சந்தித்தார்

1 mins read
decd7ec2-f8f9-488b-bc5d-574956325b96
-

தனிமை உத்தரவை 'தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனிய சிங்கப்பூர்' ஹோட்டலில் நிறைவேற்றி வந்த பெண் நண்பரை, அவரது பிறந்தநாள் அன்று சந்திக்கவேண்டும் என்ற நோக்கில், 20 வயது சோ கேசர் நேரே அவர் ஹோட்டல் அறைக்கே சென்றுவிட்டார். ஆனால் அதுவே அவருக்குத் தண்டனையைத் தேடித் தருவதாக அமைந்துவிட்டது. தனிமை உத்தரவை மீறியதன் தொடர்பில் நண்பருக்கு துணைபோன குற்றத்தை நேற்று சோ ஒப்புக்கொண்டார். ஹோட்டலில் தங்கியிருந்த மற்ற விருந்தினருடன் சென்ற சோ, எப்படியோ நண்பரின் ஹோட்டல் அறைக்குச் சென்றதுடன் அறையில் ஒரு மணி நேரம் இருந்தும் உள்ளார் என்று கூறப்பட்டது. செப்டம்பர் 6ஆம் தேதியன்று சோவின் வழக்கு விசாரணை தொடரும்.