கூடைப்பந்து அசம்பாவிதத்தில் உயிரிழந்த இளைஞரின் தாயார்: நல்ல பையன், சொர்க்கம் சென்றிருப்பான்

கூடைப்பந்து அசம்பாவிதத்தில் உயிரிழந்த இளைஞரின் தாயார்: நல்ல பையன், சொர்க்கம் சென்றிருப்பான்

2 mins read
1db47444-b33d-434d-80dc-7cb12c9e7bf6
கூடைப்பந்து வலைக் கம்பம் விழுந்து திருவாட்டி ரஹிமாவின் 17 வயது மகன் முகம்மது ரிட்வான் உயிர் இழந்தார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

பிடோக்­கில் கூடைப்­பந்து வலைக்­கம்­பம் ஒன்று இளை­ஞர் மீது விழுந்­த­தில் அவ­ருக்­குப் படு­கா­யம் ஏற்­பட்டு பின்­னர் உயி­ரி­ழந்­தார். உயி­ரி­ழந்த தம் மகன், நல்ல பையன் என்­றும் அவர் சொர்க்­கத்­தில் இருப்­பார் என்­றும் இளை­ஞ­ரின் தாயார் 62 வயது திரு­வாட்டி ரஹிமா லீ அப்­துல்லா உருக்­க­மா­கக் கூறி­னார்.

கூடைப்­பந்து விளை­யா­டி­விட்டு இரவு 11 மணி­வரை தம் அறை­யில் பாடிக்­கொண்­டும் இசை வாசித்­துக்­கொண்­டும் நண்­பர்­க­ளு­டன் மடிக்­கணினி வழி விளை­யா­டிக்­கொண்­டும் இருப்­பது 17 வயது முகம்­மது ரிட்­வா­னுக்கு வாடிக்கை.

ஆனால் திங்­கட்­கி­ழமை முதல் அந்­தச் சத்­தம் அடங்­கி­விட்­டது.அன்­றி­ரவு ஒன்­பது மணி­ய­ள­வில் போலி­சார் வீட்­டுக் கத­வைத் தட்­டி­னர். மக­னுக்கு நேர்ந்­த­தைப் பற்றி திரு­வாட்டி ரஹி­மா­வி­டம் கூறி­னர்.

"நான் எளி­மை­யான வாழ்க்­கையை வாழ்­கி­றேன். என் மக­னுக்­காக மட்­டுமே வேலை செய்து வந்­தேன். இப்­போது நான் யாருக்­காக வேலை செய்­வது என்று தெரி­ய­வில்லை," என்று மன­மு­டைந்­து­போய் கண்­ணில் நீர் நிரம்­பி­ய­வாறு கூறி­னார் அந்­தத் தாயார்.

பிடோக் சவுத் ரோடு புளோக் 18 அரு­கில் அமைந்­துள்ள கூடைப்­பந்து கூடத்­தில் ரிட்­வான் தம் நண்­ப­ரு­டன் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­போது வலைக்­கம்­பம் அவர் மீது விழுந்­தது. சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட ரிட்­வான், பின்­னர் உயி­ரி­ழந்­தார். மரணச் சான்­றி­த­ழில் இளை­ஞ­ரின் உயி­ரி­ழப்­புக்­குத் தலை காயம் கார­ணம் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

விமா­னி­யாக வேண்­டும் என்­பது தம் மக­னின் கனவு என்று திரு­வாட்டி ரஹிமா பகிர்ந்­து­கொண்­டார். தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் (மத்­திய வளா­கம்) பயின்று வந்த ரிட்­வான், நல்ல மதிப்­பெண்­கள் பெறு­ப­வர் என்­றும் அவர் கூறி­னார்.

துணைப் பிர­த­ம­ரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­குதி எம்­பி­யு­மான ஹெங் சுவீ கியட் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ரிட்­வா­னின் குடும்­பத்­தா­ரைச் சந்­தித்­துத் தம் அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­த­போது இச்­சம்­ப­வம் எப்­படி நடந்­தது என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று கூறி­யுள்­ளார்.

கார­ணத்­தைக் கண்­டு­பி­டிக்­கு­மாறு தாமும் கேட்­டுக்­கொண்­ட­தாக அந்­தத் தாயார் குறிப்­பிட்­டார். சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில்­தான் புதிய வலைக்­கம்­பம் பொருத்­தப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.