தமிழும் சமஸ்கிருதமும் பற்றி ஜார்ஜ் ஹார்ட் நாளை உரை

தமிழும் சமஸ்கிருதமும் பற்றி ஜார்ஜ் ஹார்ட் நாளை உரை

1 mins read
1abd5b81-d712-4fa7-b073-04c1c338fe96
-

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு செம்மொழிகளுக்கு இடையேயான உறவுகளையும் உரசல்களையும் பற்றிய ஆழமான ஆய்வு செய்துள்ள அரிய ஆய்வாளர் அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் மெய்நிகர் தளம் வழி நாளை இரவு 8.30 மணிக்கு உரையாற்ற இருக்கிறார்.

தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து "Tamil & Sanskrit: The two eyes of Siva" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உலகச் செம்மொழிகளில் உயர்ந்து நிற்கும் தமிழையும் சமஸ்கிருதத்தையும் தனதாக்கிக் கொண்டவர் அமெரிக்கப் பேராசிரியர் ஹார்ட்.

தமிழ்மொழிக்குச் செம்மொழி எனும் அதிகாரபூர்வ அங்கீகாரத்தை இந்திய அரசிடமிருந்து பெற்றுத்தந்தவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் ஹார்ட்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், 1975 முதல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

கீழ்கண்ட ஸூம் இணைப்பு வழி நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

https://nlbsingapore.zoom.us/j/99175623345?pwd=U2FlTzdhejhHZ0RvMUhvOFdQTWYzZz09

Meeting ID: 991 7562 3345 Passcode: 602252