தாவிக் குதித்து இல்லத் தனிமை உத்தரவை மீறியவர்

தாவிக் குதித்து இல்லத் தனிமை உத்தரவை மீறியவர்

1 mins read

தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவின்கீழ் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஒரு 39 வயது மாது, அந்த உத்தரவை மீறியதற்காக அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சிங்கப்பூரரான ஜின் சென்சூ, தமது அறையை இரண்டு முறை வெளியேறியதோடு ஒருமுறை தமது அறையிலிருந்து வேறு அறையின் பால்கனிக்கு தாவிக் குதித்தது தனிமை உத்தரவை மீறினார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி கம்போடியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய அவர், 18ஆம் தேதி வரை தம்மைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். அது பற்றி குடிநுழைவு சுங்கச்சாவடி ஆணைய அதிகாரி அவருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் ஷங்ரிலா ராசா செந்தோசாவில் தங்கியிருந்த அவர், அக்டோபர் 6ஆம், 9ஆம் தேதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றதாகக் கூறப்பட்டது. முதல் முறை அறையை விட்டு வெளியேறியபோது, அவர் தமது அறைக்கு மேல்மாடியில் இருந்த வேறொரு அறையின் பால்கனிக்குச் தாவிக் குதித்து அங்கு ஐந்து நமிடம் இருந்திருக்கிறார். அறைக்கு வெளியே முகக்கவசம் அணியாததன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளையும் மற்றவர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றும் அபாயத்தை உண்டாக்கியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.