சிங்கப்பூருக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்

1 mins read
65ed2832-126b-454a-a3b5-4a205d987cc7
-

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வர்த்தகரும் இணைய கொடை வள்ளலுமாகிய ஜோனத்தன். எரிக் கெப்லனை சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 50 வயது மதிக்கத்தக்க திரு கேப்லனை தூதராக்க உறுதி செய்யும் கூட்டங்களை அமெரிக்க செனட் நடத்தவுள்ளது.

வெளியுறவு கொள்கையில் பின்னணி இல்லாத திரு கெப்லன், தற்போது லாப நோக்கமில்லா நிறுவனமான எடியுகேஷன் சூப்பர் ஹைவே என்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். பொதுப்பள்ளிகளில் விரிவலை இணையச் சேவையை வழங்குவதே அந்த நிறுவத்தின் நோக்கம்.

தமது முயற்சிகளின் மூலம் கிட்டத்தட்ட 32 மில்லியன் பிள்ளைகள் பயனடைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், இதற்காக ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் டிரம்ப் நிர்வாகத்திடமிருந்தும் ஆதரவு பெற்றதாகக் கூறினார்.