கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சிங்கப்பூரின் ஊழியர் சந்தைக்கு பாதிப்பு

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சிங்கப்பூரின் ஊழியர் சந்தைக்கு பாதிப்பு

1 mins read
6d6a844c-66df-4a5a-85c7-4bf8f0416ff6
-

மே மற்றும் ஜூன் மாதங்களில் கடுமையாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகள் சிங்கப்பூரின் ஊழியர் சந்தையைப் பாதித்துள்ளது.

இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் முன்னேற்றம் தென்பட்டபோதும் அந்த முன்னேற்றம் இந்தக் காலாண்டில் தொடரவில்லை.

இந்த முன்னோட்ட எண்ணிக்கைகளை மனிதவள அமைச்சு, இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. பணிப்பெண்கள் அல்லத மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டாம் காலாண்டின்போது 15,000 குறைந்ததாக முன்னோட்ட கணிப்புகளைக் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.