சிங்கப்பூரின் சந்தைகளுக்கும் உணவு நிலையங்களுக்கும் செல்லும் வருகையாளர்கள் அனைவருமே டிரேஸ்டுகெதர் செயலி மற்றும் கருவிகளைக் கொண்டு செல்லவேண்டும்.
சேப்என்ட்ரி முறையைக் கட்டம் கட்டமாகச் செயல்படுத்த நகர மன்றங்கள், அலுவலகங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் பணியாற்றியதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
"சந்தைகளுக்குள்ளும் உணவு நிலையங்களுக்குள்ளும் பாதுகாப்பான நுழைவுக்கு வசதி கொடுக்க உணவுக்கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைக் கொண்டுவரவேண்டும்," என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
"சந்தைகளுக்குள்ளும் உணவு நிலையங்களுக்குள்ளும் போவதற்கான நுழைவில் சேப்என்ட்ரி முறையை மக்கள் பயன்படுத்த உதவுவதற்கான பணியாளர்களை தேசிய சுற்றுப்புற வாரியம் மற்றும் நகர மன்றம் படிப்படியாக நியமிக்கும்," என்றது அமைப்பு

