சீனத் தடுப்பூசியை வாங்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி

சீனத் தடுப்பூசியை வாங்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி

1 mins read
86ea9c20-2060-4959-9c84-95c1812bd3f2
-

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், சீனா­வின் சினோ­ஃபார்ம் தடுப்­பூ­சியை சிறப்பு ஏற்­பாட்­டின் கீழ் இறக்­கு­மதி செய்ய இங்­குள்ள 11 தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் மருந்­தகங்­க­ளுக்­கும் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இதன்­படி, அத்­த­கைய தடுப்­பூசி­க­ளைப் பயன்­ப­டுத்­தி ஆபத்து உண்­டால், அதற்கு மருத்­து­வ­ரும் தடுப்­பூ­சிப் போட்­டுக் கொள்­ப­வரும் முழுப் பொறுப்­பை­யும் ஏற்­றுக்­கொள்­வார்­கள் என்று ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

ராபிள்ஸ் மருத்­து­வக் குழு­மம், ஐஹெச்­ஹெச் ஹெல்த்­கேர் குழு­மம் உள்­ளிட்ட பல சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­கள் சினோ­ஃபார்ம் தடுப்­பூ­சி­யைப் பெற முயன்று வரு­வ­தாக ஸ்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் கடந்த புதன்­கி­ழமை கூறி­யி­ருந்­தது.

சினோ­ஃபார்ம் தடுப்­பூ­சியை ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து பயன் படுத்த அவை திட்­ட­மி­டு­கின்­றன.

சினோ­ஃபார்ம், சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கும் நான்­கா­வது தடுப்­பூசி ஆகும். ஆனால் அவற்றை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு சில நிபந்­த­னை­கள் உண்டு.

உதா­ர­ணத்­துக்கு நிறுவனங்கள் ஒவ்­வொரு மாத­மும், மூன்று மாதத்­துக்கு தேவைப்­படும் அள­வுக்­குத் தான், அது­வும் அதி­க­பட்­சம் 5,000 தடுப்­பூ­சி­க­ளைத் தான் இறக்­கு­மதி செய்­ய­மு­டி­யும்.

தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொண்­ட­வ­ருக்கு மோச­மான பாதிப்பு நிகழ்ந்­தால், அதனை 15 நாட்­களுக்­குள் அவர்­கள் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் தெரி­விக்க வேண்­டும்.

சிறப்பு ஏற்­பாட்­டின் கீழ் தரு­விக்­கப்­படும் தடுப்­பூ­சி­க­ளுக்கு அர­சாங்­கம் மானி­யம் வழங்­காது.

அவற்­றைப் போட்­டுக்­கொள்­வோ­ருக்கு காயம் ஏற்­பட்­டால், அர­சாங்­கத்­தின் நிதி உத­வி­யும் கிடைக்­காது.