சிங்கப்பூரில் நேற்றுமுன்தினம் நிலவரப்படி புதிதாக பத்து தொற்றுக் குழுமங்கள் உருவாகியுள்ளன. சுகாதார அமைச்சு வியாழக்கிழமை இரவு இதனைத் தெரிவித்தது.
அவற்றில் ஒன்பது குழுமங்களில் உள்ளவர்கள் தனிப்பட்ட தொற்றுக் குழுமங்களுடன் தொடர்புள்ளவர்கள்.
மீதமுள்ள ஒரு குழுமம் செங் லியோங் ஸ்டீல் எனும் எஃகு வர்த்தக நிறுவனத்துடன் தொடர்பு உடையது.
வியாழக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் 53 தொற்றுக்குழுமங்கள் இயங்கி வருகின்றன.
மேலும் மேஃபிளவர் சந்தைக்கும் ரெட்ஹில் சந்தைக்கும் சென்று வந்தவர்கள் சொந்தமாக கிருமிப் பரிசோதனை செய்து கொள்ள அவர்களுக்கு பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும் என்றது அமைச்சு.

