10 புதிய தொற்றுக் குழுமங்கள்

10 புதிய தொற்றுக் குழுமங்கள்

1 mins read
5ced09c9-887f-4bcf-b0d5-8db6e43db7c5
-

சிங்­கப்­பூ­ரில் நேற்­று­முன்­தி­னம் நில­வ­ரப்­படி புதி­தாக பத்து தொற்றுக் குழு­மங்­கள் உரு­வா­கி­யுள்­ளன. சுகா­தார அமைச்சு வியா­ழக்­கி­ழமை இரவு இத­னைத் தெரி­வித்­தது.

அவற்­றில் ஒன்­பது குழு­மங்­களில் உள்­ள­வர்­கள் தனிப்­பட்ட தொற்­றுக் குழு­மங்­க­ளு­டன் தொடர்­புள்­ள­வர்­கள்.

மீத­முள்ள ஒரு குழு­மம் செங் லியோங் ஸ்டீல் எனும் எஃகு வர்த்­தக நிறு­வ­னத்­து­டன் தொடர்­பு உடையது.

வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் 53 தொற்­றுக்­கு­ழு­மங்­கள் இயங்கி வரு­கின்­றன.

மேலும் மேஃபிள­வர் சந்­தைக்­கும் ரெட்­ஹில் சந்­தைக்­கும் சென்று வந்­த­வர்­கள் சொந்­த­மாக கிருமிப் பரி­சோ­தனை செய்து கொள்ள அவர்­க­ளுக்கு பரி­சோ­த­னைக் கரு­வி­கள் வழங்­கப்­படும் என்­றது அமைச்சு.