சான்: மூன்று மாதங்களில் 129 மாணவர்கள், 17 பள்ளி ஊழியர்களுக்கு கொரோனா

சான்: மூன்று மாதங்களில் 129 மாணவர்கள், 17 பள்ளி ஊழியர்களுக்கு கொரோனா

2 mins read
aad8b524-ab66-4ed2-9266-629d8b5b5996
-

கடந்த மூன்று மாதங்­களில் 129 மாண­வர்­க­ளுக்­கும் பள்ளி ஊழி­யர்­கள் 17 பேருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டள்­ள­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இது, தொடக்­கப் பள்ளி முதல் புகு­முக வகுப்பு வரை­யி­லான மாண­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்­கை­யில் 0.03% என்று அவர் கூறி­னார்.

திரு சான் அவ­ரது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று இந்த விவ­ரங்­ க­ளைத் தெரி­வித்­தார்.

எனி­னும் பள்­ளி­கள் கற்­ற­லுக்­குப் பாது­காப்­பான இடங்­க­ளாக விளங்­கு­கின்­றன என்று அவர் பெற்­றோ­ருக்கு உறுதி அளித்­தார்.

"தொற்று அபா­யத்தை முடிந்­த­வரை குறை­வாக வைத்­தி­ருக்க கடும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளோம். தொற்று ஏற்­பட்­டி­ருக்­கக் கூடி­ய­வர்­களை முடிந்­த­வரை விரைந்து கண்­டு­பி­டிக்க கண்­கா­ணிப்பு நடப்­பில் உள்­ளது. அவ்­வா­றா­ன­வர்­கள் பள்­ளிக்கு வரா­மல் இருப்­ப­தைத் தடுக்க, கல்வி அமைச்சு அவர்­க­ளுக்கு விடுப்பு வழங்­கு­கிறது." என்­றார் அவர்.

பொங்­கோல் தொடக்­கப் பள்­ளி­யில் ஒரு துப்­பு­ர­வா­ள­ருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்டு அங்கு கட்­டா­யப் பரி­சோ­த­னை­கள் நடை­பெற்­ற­தைத் தொடர்ந்து திரு சான் இந்த விவ­ரத்தை அளித்­துள்­ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி அந்­தத் தொற்­றுக் குழு­மத்­தில் 12 சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

மீண்­டும் வீட்­டி­லி­ருந்து பாடம் கற்­கும் முறைக்கு திரும்ப வேண்­டும் என்று சில பெற்­றோர் தம்­மி­டம் கருத்­துக் கூறி­யுள்­ள­தா­க­வும் வேறு­சி­லர் அதனை எதிர்த்துள்ள தாகவும் திரு சான் கூறி­னார்.

வீட்டில் இருந்தபடி கற்க எல்லா மாணவர்களுக்கும் உகந்த சூழல் இருக்காது என்றும் அந்த முறை மாணவர்களின் கற்றலையும் சமூக, மனநலனையும் பாதிக்கக்கூடியது என்றும் அவர் சொன்னார்.