நான்கு கத்தோலிக்க தேவாலயங்களுக்கு கிருமி தொற்றியவர்கள் சென்றுள்ளனர்

நான்கு கத்தோலிக்க தேவாலயங்களுக்கு கிருமி தொற்றியவர்கள் சென்றுள்ளனர்

2 mins read
2c9c820e-21d4-4ac4-8ed0-fa8bd231a8a4
-

இங்­குள்ள நான்கு கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி தொற்று கண்­ட­வர்­கள் சென்று வந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் ரோமன் கத்­தோ­லிக்­கத் திருச்­சபை கூறி­யுள்­ளது. திருச்­சபை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் அத­னைத் தெரி­வித்­தது.

அவை ஹோலி ஸ்பி­ரிட் தேவா­ ல­யம், ஹோலி கிராஸ் தேவா­ல­யம், இம்­மேக்­கு­லேட் ஹார்ட் ஆஃப் மேரி தேவா­ல­யம், செயிண்ட் ஆன்ஸ் தேவா­ல­யம் என்று திருச்­சபை குறிப்­பிட்­டது. தொற்று கண்­ட­வர்­கள் கடந்த 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அங்கு சென்­றுள்­ள­னர்.

அச்­சம்­ப­வங்­கள் எல்­லா­வற்­றி­லும் தொற்­றுள்­ள­வர்­கள் யாரி­ட­மும் எவ்­வித அறி­கு­றி­யும் தென்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் தேவா­ல­யங்­க­ளுக்கு வந்­த­போது அங்கு இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப்புகளு­டன் பணி­யாற்றி வரு­வ­தாக திருச்­சபை கூறி­யது. பாதிக்­கப்­பட்ட தேவா­ல­யங்­கள் முழு­மை­யாக சுத்­தம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

அத்­து­டன் தேவா­ல­யங்­கள் வழி­பாட்­டுக்­குப் பாது­காப்­பான இடங் களாக இருப்­பதை உறு­தி­செய்ய தேவா­ல­யங்­க­ளு­டன் ஒத்­து­ழைக்­கும்­படி ரோமன் கத்­தோ­லிக்­கத் திருச்­சபை வழி­பாட்­டா­ளர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

அதன் தொடர்­பில் நான்கு தேவா­ல­யங்­களும் அவற்­றின் ஃபேஸ்புக் பக்­கங்­களில் தனித்­த­னியே விவ­ரம் அளித்­தன.

செங்­காங்­கில் உள்ள செயிண்ட் ஆன்ஸ் தேவா­ல­யத்­துக்கு தொற்று கண்ட ஒரு­வர் ஜூலை 25 அன்று பிற்­ப­கல் 1.30 மணி கூட்­டு­வழி பாட்­டில் கலந்­து­கொண்­டார். அவர் தேவா­ல­யத்­தில் நண்­ப­கல் முதல் இருந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

அதே நாளில், ஹாய்­லன்ட் ரோடில் உள்ள இம்­மேக்­கு­லெட் ஹார்ட் ஆஃப் மேரி தேவா­ல­யத்­தில் நடந்த மாலை 5 மணி கூட்டு வழி­பாட்­டில் தொற்­றுள்­ள­வர் ஒரு­வர் கலந்­து­கொண்­டார்.

கிள­மெண்டி அவென்யூ ஒன்­றில் உள்ள ஹோலி கிராஸ் தேவா­ல­யத்­துக்கு தொற்­றுள்­ள­வர் ஜூலை 25ஆம் தேதி காலை ஏழரை மணி தொழு­கை­யின்­போது வந்­தார் என்­றும் தாம் முன்­ன­தாக சென்று வந்த சந்­தை­யில் அவ­ருக்­குத் தொற்று பர­வி­யி­ருக்­க­லாம் என்­றும் தேவா­ல­யம் கூறி­யது.

தொற்று உள்­ள­வ­ருக்கு ஏற்­கெ­னவே இரண்டு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டு­விட்­டன.

அப்­பர் தாம்­சன் ரோடில் உள்ள ஹோலி ஸ்பி­ரிட் தேவா­ல­யத்­தில் ஜூலை 18ஆம் தேதி 11 மணி கூட்­டு­வ­ழி­பாட்­டில் தொற்­றுள்ள ஒரு­வர் கலந்­து­கொண்­டார். அவ­ருக்­கும் முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்டு விட்­டது.