மன அதிர்ச்சியைத் தரும் நிகழ்வுக்குப் பின்னர் அவசரப் பரிமாரிப்பு தேவைப்படுபவர்கள் சிறிதுகாலத்துக்குச் சிகிச்சை பெற, மனநலக் கழகத்தில் புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலம் தங்கி சிகிச்சை பெறும் பிரிவு, இவ்வாண்டு பிற்பகுதியில் செயல்படத் தொடங்கக்கூடும்.
அதில் 72 மணி நேரம் வரைக்கும் கண்காணிப்பும் கிகிச்சையும் வழங்கப்படும். பிறகு, நோயாளிகள் வீட்டுக்கோ வேறு வார்டுக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மனநலக் கழகத்தின் தாதியர் கொண்டாட்டத்தில் நேற்று இணையம் வழியாக கலந்துகொண்ட மூத்த சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி அதனைத் தெரிவித்தார்.

