டோவர் வனத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்படுவதற்கு வரவேற்பு

டோவர் வனத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்படுவதற்கு வரவேற்பு

2 mins read
9b5b5d9e-b031-4575-a2fe-2bf02103d57b
டோவர் வனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டோவர் வனத்­தின் ஒரு­பா­தி­யில் இப்­போ­தைக்கு வீடு­கள் கட்­டா­மல் அதனை இயற்­கைப் பூங்கா­வா­கப் பாது­காக்க எடுக்­கப்­பட்ட முடிவு இயற்கை ஆர்­வ­லர்­க­ளுக்கு மட்­டு­மல்ல தற்­போ­துள்ள சிங்­கப்­பூ­ரர் ­க­ளுக்­கும் வருங்­கால சந்­த­தி யினருக்­கும் வெற்றி என்று இயற்கைப் பாது­காப்பு நிபு­ணர்­களும் டோவர் குடி­யி­ருப்­பா­ளர்­களும் கூறி­யுள்­ள­னர்.

முக்­கிய வீடமைப்­புத் தேவை­களை விட்­டுக் கொடுக்­கா­மல் துடிப்­பான இயற்கை பாது­காக்­கப்­பட்ட ஒரு சிங்­கப்­பூர், மேம்­பட்ட சிங்­கப்­பூர் என்­று இயற்கை சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் ஷோன் லம் கூறி­னார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மாற்றி அமைக்­கப்­பட்ட திட்­டத்தை அவர் ஒரு நல்ல தீர்வு என்று வரு­ணித்­தார்.

கழ­கத்­தின் புதிய திட்­டம், இயற்கைப் பகு­தி­யா­க­வும் மற்ற இயற்­கைப் பரப்­பு­களை இணைக்­கும் பாதை­யா­க­வும் உள்ள டோவர் வனம் அதன் சுற்­றுப்­புற செயல்­பாடு­களைத் தொடர்வதை உறுதி செய்­யும் என்­றார் டாக்­டர் லம்.

டோவர் வனம் அழிக்­கப்­ப­டக்­கூ­டாது என்று இணை­யத்­தில் கையெ­ழுத்து மனு­வைத் தொடங்கிய குடி­யி­ருப்­பா­ளர் சிட்னி லியோங்கும் திட்­டத்தை வர­வேற்­றார்.

இவ்­வே­ளை­யில் டோவர் வனத்தின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள 11 ஹெக்­டர் நிலப்­ப­ரப்பு வீடு­க­ளைக் கட்­ட­வும் வர்த்­தக, பொழு­து­போக்கு வச­தி­களை அமைக்­க­வும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த நிலப்­ப­ரப்­பில் வீடு­க­ளைக் கட்­டு­வது, முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் வீடு­க­ளுக்கு இருக்­கும் வலு­வான தேவை­யைப் பூர்த்தி செய்ய உத­வும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று கூறி­யது.

அந்த வட்­டா­ரத்­தில் கடை­சி­யாக 2012ஆம் ஆண்­டில் பிடிஓ வீட்­டுத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது என்றது கழ­கம். பிள்­ளை­கள் தங்­கள் அருகில் வசிக்க விரும்­பு­வ­தாக அப்­ப­குதி குடி­யி­ருப்­பா­ளர்­கள் தன்­னி­டம் கருத்­து­ரைத்­துள்­ள­தாக கழ­கம் சொன்­னது.