துவாஸ் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த கட்டத்தில்

துவாஸ் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த கட்டத்தில்

1 mins read
74bddb20-9541-4531-a8b2-86012ceca5e2
ஓவியரின்பார்வையில் துவாஸ்பகுதியில்கட்டப்படும்சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட நீர், கழிவுச் சுத்திகரிப்பு ஆலை. படம்: தேசிய சுற்றுப்புற அமைப்பு -

சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட நீர், கழிவுச் சுத்திகரிப்பு நிலையமான துவாஸ் நெக்சஸ் நிலையத்திற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்துவைக்கின்றன.

நிலையம், அமைந்­தி­ருக்­கும் நிலத்தை நன்கு உப­யோ­கித்து எரி­சக்தி மற்­றும் வளங்­க­ளை ஆக்­க­பூர்­வ­மான முறை­யில் பயன்­ப­டுத்­தும். அடுத்த கட்டமாக ஒரு நாளைக்கு 400 டன் அளவு உணவுக் கழிவைச் சுத்தம் செய்யக்கூடிய ஆலை, 800 டன் அளவு கழிவை எரிக்கக்கூடிய ஆலை ஆகியவை அமைக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சுத்திகரிப்பு நிலை­யத்­தின் முதற்­கட்­டக் கட்­டு­மா­னப் பணி­கள் 2025ஆம் ஆண்­டுக்­குள் நிறை­வு­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கழி­வற்ற பொரு­ளி­யலை வளர்க்­கும் இலக்கை சிங்­கப்­பூர் கொண்­டுள்­ளது. அதற்கு இத்தகைய வச­தி­கள் முக்­கி­யப் பங்கு வகிக்கும். 'யுஇ­எஸ் ஹோல்­டிங்ஸ்', 'சைனா ஹார்பர்' பொரு­ளி­யல் நிறு­வ­னம் ஆகிய இரண்­டுக்­கும் நிலையத்தைக் கட்­டு­வ­தற்­கான குத்­தகை வழங்­கப்­பட்­டது. குத்­த­கை­யின் மதிப்பு 428 மில்­லி­யன் வெள்ளி. இரண்டு நிறு­வ­னங்­களும் சேர்ந்து நிலையத்தைக் கட்­டும். துவாஸ் நெக்சசில் இரண்டு மாபெரும் ஆலைகள் இடம்பெறும். அவற்றில் ஒன்றான நீர் சுத்திகரிப்பு ஆலை பியுபி எனப்படும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கீழ் வரும். மற்­றொன்று ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சுத்­தி­க­ரிப்பு ஆலை. அதை தேசி­யச் சுற்­றுப்­புற அமைப்பு நிர்­வ­கிக்­கும்.