தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடு புதுப்பிப்பு நிறுவனத்திற்கு எதிராக 30 புகார்கள்

1 mins read
fbbedaf3-ea88-4582-823d-884bdb90d12d
-

'99 ரெனோ' எனும் வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த மாதம் வரை பிரெஞ்சு ரோட்டில் அமைந்துள்ள அந்நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களிடமிருந்து 30 புகார்கள் வந்ததாகப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

முன்­ப­ணம் வழங்­கி­யும் புதுப்­பிப்­புப் பணி­களில் தொடர்ந்து தாம­தம் ஏற்­பட்­ட­தா­கப் பெரும்­பா­லான புகார்­களில் குறிப்­பி­டப்­பட்­டது. '99 ரெனோ' நிறுவனத்துடன் சேர்ந்து பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துவைக்க பயனீட்டாளர் சங்கம் முயற்சி செய்திருக்கிறது. ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. தச்­சு­வேலை போன்­ற­வற்­றுக்கு முன்­ப­ணம் வாங்­கி­ய­போ­தும் நிறு­வ­னம் சில பணி­க­ளைத் தொடங்­க­வில்லை, சில வீடு­களில் புதுப்­பிப்­புப் பணி­களை முடிக்­க­வில்லை. இத்­த­கைய புகார்­கள் வந்­த­தா­கச் சங்­கம் குறிப்­பிட்­டது.

கொவிட்-19 சூழ­லால் ஏற்­பட்ட மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை, நிதி நெருக்­கடி போன்ற கார­ணங்­க­ளால் புதுப்­பிப்­புப் பணி­களில் தாம­தம் ஏற்­பட்­ட­தாக நிறு­வ­னம் சொன்­ன­தென்­றும் வாடிக்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றர்.

புதுப்­பிப்­புப் பணி­களை முடிக்­கத் தேவை­யான கால அவ­கா­சத்தை நிறு­வ­னத்­தால் கணிக்­க­மு­டி­ய­வில்லை என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது. அப்­ப­டி­யி­ருந்­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து தொடர்ந்து முன்­ப­ணத்தை வாங்­கிக்­கொண்டு நிறு­வ­னம் புதிய பணி­களை ஏற்­றுக்­கொண்­டதா­கப் பய­னீட்­டா­ளர் சங்­கம் கூறி­யது. '99 ரெனோ' கையாண்ட புதுப்பிப்புப் பணிகளின் மதிப்பு 6,000லிருந்து 54,000 வெள்ளிக்கு இடைப்பட்டிருந்தது என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

'99 ரெனோ' நிறு­வ­னத்தை நன்கு கண்­கா­ணிக்­கப்­போ­வ­தா­க­வும் தேவைப்­பட்­டால் அதற்கு எதி­ரா­கத் தகுந்த நடி­வ­டிக்கை எடுக்­கத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் கூறி­யது.