சிங்கப்பூரின் சேவை மற்றும் உற்பத்தித் துறை நிறுவனங்கள் தங்களின் வர்த்தகம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
எனினும், மூன்று மாதங்களுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் உற்பத்தி நிறுவனங்களிடையே நம்பிக்கை குறைந்துள்ளது.
பொருளியல் மேம்பாட்டு வாரியம், 'சிங்ஸ்டேட்' புள்ளி விவரப் பிரிவு இரண்டும் தனித்தனியாக வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் விவரங்கள் தெரியவந்தன. இதர துறைகளின் விவரங்களும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டன.

