பிராஸ் பசார்-பூகிஸ் கலாசார கட்டடங்களில் ஒளியூட்டு

1 mins read
5936d2ee-fb02-4165-a364-9181d82ca222
அப்ஜெக்டிவ்ஸ் கட்டடம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆண்­டு­தோ­றும் ஆகஸ்ட் மாதத்­தில் சிங்­கப்­பூ­ரின் வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க அல்­லது கலா­சார சின்­னங்­க­ளாக விளங்­கும் கட்டடங்­கள் மற்­றும் மத்­தி­யப் பகு­தி­கள் ஒளி­யூட்­டப்­படும். அந்த வகை­யில் இந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரின் 56வது தேசிய தினத்­தை­யொட்டி பிராஸ் பசார்-பூகிஸ் பகு­தி­யில் உள்ள கலாசாரக் கட்­ட­டங்­களும் சிவப்பு, வெள்ளை நிறத்­தில் ஒளி­யூட்­டப்­படும்.

சென்ற ஆண்டு விக்­டோ­ரியா அர­ங்­கம், 'தி ஆர்ட்ஸ் ஹவுஸ்' கட்­ட­டம் உள்­ளிட்­டவை ஒளி­யூட்­டப்­பட்­டன. இம்­முறை தேசிய வடி­வ­மைப்பு நிலை­யம், அப்ஜெக்டிவ்ஸ் பட, புகைப்­பட நிலை­யம் போன்ற பல­ருக்கு அதி­கம் பரிச்­சி­ய­மில்­லாத இடங்­கள் ஒளி­யூட்­டப்­படும். தென்­கிழக்­கா­சி­வா­யின் ஆக உய­ர­மான கட்­ட­ட­மாக இருந்த 'தி கேத்தே'யும் தேர்­தெ­டுக்­கப்­பட்டுள்ளது. 1939ஆம் ஆண்­டில் கட்­டப்­பட்ட 'தி கேத்தே', அந்­தக் காலத்­தில் சிங்­கப்­பூ­ரில் குளிர் சாதன வச­தி­யு­டன் இருந்த முதல் திரை­ய­ரங்­கம். அங்­கு­தான் முதன்­மு­த­லில் அமெ­ரிக்க, பிரிட்­டிஷ் திரைப்­ப­டங்­கள் திரை­யி­டப்­பட்­டன.

இவை உட்பட ஒளியூட்டுக்கு ஏழு கலாசார கட்டடங்களை தேசிய மரபுடைமைச் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. ஆண்­டு­தோறும் இடம்­பெ­றும் ஒளி­யூட்டு நிகழ்­வோடு இம்­முறை இந்த ஏழு கட்டடங்­களும் அடுத்த மாதம் ஒவ்­வொரு நாளும் மாலை ஏழரை மணி முதல் நள்­ளி­ரவு 12 மணி வரை ஒளி­யூட்­டப்­படும்.