வருங்கால சிங்கப்பூர்: கற்பனை கருவி

வருங்கால சிங்கப்பூர்: கற்பனை கருவி

1 mins read
3f5d406f-ee89-4d81-ba42-d2e7892b7675
-

வருங்காலத்தில் சிங்கப்பூரில் வேறொரு கிருமித்தொற்று ஏற்பட்டால் பொதுச் சுகாதாரத்தில் அதிக அக்கறை காட்டுவதா, பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதா அல்லது பொருளியலுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் இயல்பு நிலையிலேயே இருப்பதா?

இத்தகைய சூழல்களைக் கற்பனை செய்து அவற்றை எவ்வாறு அணுகலாம் என்பதை அலச பொதுமக்களுடன் தொடர்புகொள்ள வகைசெய்யும் 'குவெஸ்ட்2030' எனும் இணையக் கருவியைக் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிடவுள்ளது.

இணையக் கருவியின் முதல் வடிவம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும். குறைந்தது 20,000 பொதுமக்களை அதில் ஈடுபடச் செய்வது இலக்கு.