ஈரோடு தமிழன்பன் கலந்துகொள்ளும் சந்திப்பு

ஈரோடு தமிழன்பன் கலந்துகொள்ளும் சந்திப்பு

1 mins read
f7d19ef6-0f98-4a51-8271-3a01010a3fad
-

சிங்கப்பூர்க் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது.

அந்த வகையில் கவிமாலையின் 254வது இம்மாதச் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 31. 07. 2021 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு ஸூம் செயலி வழியாக நடைபெறவிருக்கிறது.

'தமிழ்க் கவிதை விடி­ய­லின் புது­வெ­ளிச்­சம்' எனும் தலைப்­பில் ஈரோடு தமி­ழன்­பன் கவி­தை­கள் குறித்து திரு.தி.அமிர்­த­க­ணே­சன் சிறப்­பு­ரை­யாற்­று­கி­றார்.

மேலும் கவி­ஞர் ஈரோடு தமி­ழன்­பன் அவர்­க­ளின் அண்மையில் வெளி­யி­டப்­பட்ட மீய­டுப்பு மீதிலே என்ற நூலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட யாப்­பி­லக்­கண புது­மை­க­ளைப் பற்றி பேசு­கி­றார் எழுத்­தா­ளர் பவ­ள­சங்­கரி.

ஈரோடு தமி­ழன்­பன் கவி­தை­களில் பிடித்த, படித்த கவிதை வாசித்­தல், 'கைய­ரு­கில் வானம் ' எனும் தலைப்­பி­லான இம்­மா­தக் கவி­தைப் போட்டி, பரி­ச­ளிப்பு போன்ற அங்­கங்­களும் உண்டு.

இந்த நிகழ்­வில் கவி­ஞர் ஈரோடு தமி­ழன்­பன் அவர்­கள் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு நம்­மி­டையே கலந்­து­ரை­யா­ட­வி­ருக்­கி­றார்.

இணை­யம் வழி நடை­பெ­றும் இந்த நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம். ஸூம் எண்: 238 635 9660. கவி­ஞர் அஷ்­ரப் அலி தொகுத்­து­வ­ழங்­க­வி­ருக்­கும் இந்த நிகழ்­வுக்கு அனை­வ­ரை­யும் அன்­பு­டன் அழைக்­கிறது கவி­மாலை.