பீட்டர் ஏ. கோக்லனிஸ்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூரின் 50வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில், 2015ல் 'சிங்கப்பூரை நேசிக்க வைக்கும் 50 அம்சங்கள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை வெளியிட்டது.
அந்தச் செய்தித்தாளின் எழுத்தாளர்கள் குறுகிய கட்டுரைகள் மூலம் வழக்கத்திற்கு மாறானவை முதல் புதிரானவை வரை பலவற்றையும் பற்றி அதில் தெரிவித்து இருந்தனர்.
அந்த முழு புத்தகமும் உற்சாகமானதாக இருந்தது. என்றாலும் அதில் ஒரு கட்டுரை பல ஆண்டுகள் என் மனதைவிட்டு அகலாமல் இருந்து வந்துள்ளது.
சிங்கப்பூரில் பொது ஆர்ப்பாட்டம் என்பது விரும்பப்படாத, வெறுப்பான ஒன்று என்பது எல்லாருக்கும் தெரியும்.
இருந்தாலும்கூட, சிங்கப்பூரர்கள் புகார் எழுப்புவோர்தான் என்று அந்த எழுத்தாளர் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். இது கவனம் செலுத்தத்தக்க ஒன்றாகும்.
கடந்த 1977ல், அப்போது பிரதமராக இருந்த திரு லீ குவான் இயூ ஒருமுறை இப்படி தெரிவித்தார்.
"சிங்கப்பூரரை உங்களுக்குத் தெரியும். அவர் கடுமைன உழைப்பாளி. தொழில்முனைப்பு உள்ளவர். உறுதினவர். அப்படி இல்லை எனில் சாதனைகளை நிகழ்த்தி இருக்க முடியாது. அதேவேளையில், சிங்கப்பூரர் முணுமுணுப்பதிலும் வல்லவர்," என்று திரு லீ தெரிவித்து இருந்தார்.
சிங்கப்பூரர்கள் புகார் கூறுவதை விரும்புவர்கள் என்பதை இங்கு வரும் ஒரு சுற்றுப்பயணி தெரிந்துகொள்ள வெகு காலம் பிடிக்காது. இதன் விளைவாக புகார் கூறுவது என்பது ஒரு கலைகவே உருவாகி இருக்கிறது.
சாங்கியில் இருந்து அல்லது ஹோட்டல் அறைக்குச் சென்ற பிறகு அங்கிருந்து உணவங்காடி நிலையத்திற்கு அல்லது காப்பிக் கடைக்கு டாக்சியில் செல்லும்போது இந்த வகை முதல் அனுபவம் ஒரு சுற்றுப் பயணிக்கு அநேகமாகக் கிடைக்கக்கூடும்.
இங்குவரும் ஒரு சுற்றுப்பயணி, விலை அதிகரிப்பு, கடுமைன போட்டி, அரசாங்கத்தின் செயல்திறன், பருவநிலை, மூர்க்கமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது, குப்பை போடுவது, சேவைகள் சரியில்லை என்று கூறுவது, ரயில்களில் கூட்டம் அதிகம் என்று கூறுவது போன்ற புகார்களை எல்லாம் ஓரளவுக்கோ, விரிவாகவோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
சிங்கப்பூரர்கள் புகார் கூறுவதற்கு உண்மைன சில காரணங்கள் உள்ளன.
நாடு மிக அதிக போட்டியை எதிர் நோக்குகிறது; இடைவிடாமல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன; குறிப்பாக குறைந்த வருமான ஊழியர்களுக்கான சம்பளம் விலைவாசியுடன் எப்போதுமே ஒத்திருப்பதில்லை; அரசாங்கம் சில நேரங்களில் கடுமைக நடந்துகொள்ளவேண்டி இருக்கிறது; பருவநிலையும் மாறி மாறி வருகிறது என்பதெல்லாம் காரணங்கள்.
புகார் தெரிவிக்கும் ஒருவர் ஒன்றை எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.
வருகைளர்களிடம் புகார்களைக் கூற சிங்கப்பூரர்கள் ஆசைப்படும்போது அவர்கள் கூறும் புகார்கள் வேறு வடிவங்களைப் பெறுகின்றன. அவை அடிக்கடி கொள்கைகளை வகுக்கும் குறிப்பிட்டவர்களை நோக்கி திரும்புகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
எடுத்துக்காட்டாக, சமூக மேம்பாட்டு மன்றங்களில் இடம்பெறும் கலந்துரைடல்கள், கருத்தறியும் பிரிவு நடத்தும் கலந்துரைடல்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூடிய தகவல் தொடர்புகள், முன்னணி செய்தித்தாட்களுக்கு எழுதப்படுகின்ற கடிதங்கள் அல்லது சமூக ஊடகம், இணையம் எந்த வகையில் இருந்தாலும் அவை சில நேரம் அரசாங்கத்தை குறி வைப்பவைக இருக்கின்றன.
அவை, முக்கியமான ஆக்ககரமான நோக்கங்களுக்கு உதவுபவைகவும் உள்ளன. திட்டமிட்டு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் பொருள் பொதிந்த கொள்கை மாற்றங்கள் இடம்பெற பயனுள்ள தகவல்கள் அவற்றின் மூலம் கிடைத்து இருக்கின்றன.
சிங்கப்பூரர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் புகார்களையும் ஆக்ககரமான கண்ணோட்டத்தில் கவனிக்க வேண்டியது எப்போதுமே முக்கியமானது. குறிப்பாக தேசிய தின நேரத்தின்போது அவை இன்னும் முக்கியமானதாகக் கருதப்படு கின்றன.
நான் வசிக்கும் அமெரிக்காவில் சொல் வதைப் போல 'உள்ளதை உள்ளபடி பார்க்கும் உணர்வுடன் கூற வேண்டுமானால்', சிங்கப்பூர் மக்கள் புகார் தெரிவிக்க விரும்பும் போதெல்லாம் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்த முறை புகார் தெரிவிக்க விரும்பும்போது, அமெரிக்க சொற்றொடர் கூறுவதைப்போல, சிங்கப்பூர் பல சாதனைகளுக்கு உரிய நாடு என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மையிலேயே பார்க்கப்போனால் சிங்கப்பூரின் செயல்திறன் பெரும்பாலானவற்றில் மிகவும் கவரக்கூடியதாக திகழ்கிறது. வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், நாகரிக வாழ்க்கை முதலானவற்றில் அது தலைசிறந்த நிலையில் அல்லது தலைசிறந்த நிலையைத் தொடும் நிலையில் இருக்கிறது.
மொத்த தனிநபர் வருமானம், அதிக ஆயுட்காலம், குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது, வீட்டுடைமை விகிதம் அதிகமாக இருப்பது, கல்வித் தரம், கல்விச் செயல்திறன், சுகாதாரப் பராமரிப்பு கிடைப்பது அதன் ஆற்றல் போன்ற சமூகப் பொருளியல் அம்சங்களிலும் மனித மேம்பாட்டு அட்டவணை போன்றவற்றிலும் சிங்கப்பூர் உலகின் முன்னணி நாடாக இருக்கிறது.
உலகத்தின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியல் போன்ற பரந்த அளவில் பார்க்கையில் பட்டியலின் உச்சியில் அது இல்லை என்றாலும் சிங்கப்பூரில் வரி அளவு குறைவு. உலகளாவிய போட்டித்திறன், பாதுகாப்பு, நேர்மை, மரிதை ஆகியவற்றைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் மிக உயரிய இடத்தில் இருக்கிறது.
2020 மனித மேம்பாட்டு அட்டவணையில் சிங்கப்பூர் இப்போது மிக உயரிய இடத்தில் இருக்கிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் சில ஆண்டுகளுக்கு முன் பாங் சோங் யோங் என்ற பொருளியல் வல்லுநர் ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
நியூர்க், லண்டன், ஹாங்காங் போன்ற பெரும் நகர்களைவிட சிங்கப்பூரில் வருமான ஏற்றத்தாழ்வு குறைவாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
சமூக நீதியைப் பார்க்கையில், 'தி இக்னாமிஸ்ட்' குழுமத்தின் பொருளியல் வேவுப் பிரிவின் அட்டவணைப்படி, 80 நாடுகளில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்த வலுவான அம்சங்கள் எல்லாம் சிங்கப்பூரின் செல்வாக்கில் பிரதிபலிக்கின்றன. வட்டார அளவிலும் உலகளவிலும் சிங்கப்பூர் மரிதையோடு நடத்தப்படுகிறது. செல்வாக்கு கொண்டதாக அது இருந்து வருகிறது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் இந்த ஆண்டு உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடிக ஆக அதிக நம்பிக்கை கொண்டதாக வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஆகைல், இந்த மாதம் தேசிய தினம் கொண்டாடப்படும்போது சிங்கப்பூரர்கள் அவர்களின் சாதனைகளை எல்லாம் நினைத்துப் பார்ப்பது சரின ஒன்றாகவே இருக்கும்.
குறைந்த வருமானத்துடன் வாழ்க்கையை நடத்தும் மக்களைப் பொறுத்தவரை சிங்கப்பூர் குறையில்லாத, முழுமை ன நாடாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கையில் சிங்கப்பூர் வாழ்வதற்கு மிகவும் நல்ல இடம் என்பது பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.
அநேகமாக வெளியே தெரிவிக்கப்படுகின்ற புகார்கள் எல்லாம் நமக்கு உதவக்கூடியவையாக இருக்கலாம். இந்த நல்ல பணி தொடரட்டும்.
பீட்டர் ஏ. கோக்லனிஸ், ஆல்பர்ட் ஆர். நியூசம் தனிச்சிறப்புமிக்க வரலாற்றுத் துறை பேராசிரியர்,
அமெரிக்காவின் சேப்பல் ஹில், நார்த் கேரொலினா பல்கலைக்கழக உலக ஆய்வுப் பயிலகத்தின் இயக்குநர். இவர் முன்பு சிங்கப்பூரில் வசித்த போது போதித்தும் இருக்கிறார். அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார்.

