மனஅழுத்தம் தவிர்ப்போம், மனஅமைதி பெறுவோம்

மனஅழுத்தம் தவிர்ப்போம், மனஅமைதி பெறுவோம்

5 mins read
8cee0ae7-77b2-4a42-abbb-f34e29efb4dc
-

மனிதவள வழிகாட்டி, வேலை நேரத்துக்குப் பிறகான தகவல்தொடர்பு கொள்கை வார்ப்பு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஒன்றான பணியிட அழுத்தத்தை மதிப்பிடுவதற்கான இணையக் கருவி

சிங்­கப்­பூ­ரர்­கள், கடின உழைப்­பா­ளி­கள் என்­ப­தில் எந்த ரக­சி­ய­மும் இல்லை. மனி­த­வள அமைச்­சின் அண்மை புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, முழு­நேர ஊழி­யர்­கள், கடந்த ஆண்­டில் வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக 45.4 மணி நேரம் வேலை செய்­துள்­ள­னர். ஒப்­

பி­டும்­போது, தென் கொரிய மக்­கள் வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக 44.4 மணி நேரம் வேலை செய்­வ­தாக பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, மேம்­பாட்­டுக்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த ஏற்­றத்­தாழ்­வைக் குறைப்­ப­தற்கு கொள்­ளை­நோய்ப் பர­வல் குறை­வா­கவே உத­வி­யுள்­ளது.

கடந்த ஆண்டு வெளி­யி­டப்­பட்ட ''ஆசி­யான் சந்­தை­களில் கொவிட்-19 கொள்­ளை­நோ­யின் தாக்­கம்'' என்ற தலைப்­பி­லான யூஓபி ஆய்­வின்­படி, உள்­ளூர் ஊழி­யர்­களில் 89 விழுக்­காட்­டி­னர் வேலை­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்ள அதிக நேரம் உழைக்க வேண்­டும் என்று நினைக்­

கி­றார்­கள்.

மூன்று பகு­தி­க­ளாக வெளி­வ­ரும் ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் தொட­ரின் இரண்­டா­வது பகுதி, ஒரு தேச­மாக வலு­வு­டன் மீண்டு வரு­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஆராய்­கிறது. வேலை- வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­டணி (AfA on WLH) மக்­கள் தங்­கள் வேலை­யி­லும் வாழ்க்­கை­யி­லும் நல்­லி­ணக்­கம் காண எப்­படி உத­வ­மு­டி­யும் என்­பதை ஆராய்­கிறது.

வேலை­யி­லும் வாழ்க்­கை­யி­லும் நல்­லி­ணக்­கம் என்­பதை வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­டணி எவ்­வாறு வரை­ய­றுக்­கிறது?

தனி­ம­னி­தர்­கள் தங்­க­ளது வேலை­யி­லும் தனிப்­பட்ட வாழ்­வி­லும் திறம்­பட இலக்­கு­களை எட்­டு­வதே வேலை­யி­லும் வாழ்க்­கை­யி­லும் நல்­லி­ணக்­கம் என்று வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­டணி விளக்­கு­கிறது.

நான் மனி­த­வ­ளத் துறை­யில் (HR) பணி­பு­ரி­

கி­றேன், எனது பணி­யி­டத்­தில் சில வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்க நடை­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்த விரும்­பு­கி­றேன். அதற்­கான முயற்சி­கள் அல்­லது வளங்­கள் குறித்து வேலை- வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­ட­ணியை அணு­க­லாமா?

வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கம் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­த­வும் முயற்­சி­க­ளை­யும் வளங்­க­ளை­யும் வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­டணி உரு­வாக்கி வரு­கிறது. அவை ஆகஸ்ட் மாதம் தொடங்­கப்­படும். நியா­ய­மான, முன்­னேற்­றம் காணும் வேலை­வாய்ப்பு நடை­மு­றை­க­ளுக்­கான முத்­த­ரப்புக் கூட்­ட­ணி­யின் (Tafep) இணை­யத்­த­ளத்­தில் இவை பகி­ரப்­படும்.

வர்த்­த­கங்­கள் எவ்­வாறு வேலை-வாழ்க்கை நடை­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்த முடி­யும் என்­ப­தற்­கான மனி­த­வள வழி­காட்டி, வேலை நேரத்­திற்கு அப்­பால் வேலை தொடர்­பான தக­வல்­தொ­டர்­புக்­கான வரை­ய­றை­களை அமைப்­ப­தற்­கான ''வேலை நேரத்­துக்­குப் பிற­கான தக­வல்­தொ­டர்பு கொள்கை வார்ப்­புரு'' ஆகி­யவை இதில் அடங்­கும். முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் இந்த முயற்­சி­க­ளை­யும் வளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முத்­த­ரப்புப் பங்­கா­ளி­களும் ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­டணி (ஏஎ­ஃப்ஏ) உறுப்­

பி­னர்­களும் ஊக்­கம் கொடுப்­பார்­கள்.

வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­டணி பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள கியூ­ஆர் குறி­யீட்டை வரு­டுங்­கள்

மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­யவை ஏப்­ரல் மாதத்­தில் வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கம் குறித்த முத்­த­ரப்பு தரத்தை அறி­மு­கப்­ப­டுத்­தின. வெவ்­வேறு வாழ்க்கை நிலை­களில் ஊழி­யர்­க­ளின் முன்­னு­ரி­மை­களை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கும் வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­தைக் காண்­ப­தில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­கும் பரிந்­து­ரைக்­கப்­பட்ட வேலை­வாய்ப்பு நடை­மு­றை­களை இது வழங்­கு­கிறது.

வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கம் குறித்த முத்­த­ரப்பு தரத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வும், மேலும் பய­னுள்ள வேலை-வாழ்க்கை வளங்

­க­ளைப் பெற­வும், Tafep-இன் இணை­யத்­த­ளத்­தை­யும் (tal.sg/tafep) மனி­த­வள அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தை­யும் (mom.gov.sg) முத­லா­ளி­கள் காண­லாம்.

என் பணி­யில் வேலை-வாழ்க்­கைக்கு உகந்த கலா­சா­ரம் இல்லை. வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்க நடை­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான மனி­த­வள வழி­காட்டி, வேலை நேரத்­துக்­குப் பிற­கான தக­வல்­தொ­டர்பு கொள்கை வார்ப்­புரு, ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் முயற்­சி­களில் ஒன்­றான பணி­யிட அழுத்­தத்தை மதிப்­பி­டு­வ­தற்­கான இணை­யக் கருவி ஆகி­யன குறித்து பரி­சீ­லிக்க எனது முத­லா­ளியை எவ்­வாறு ஊக்­கு­விப்­பது?

Tafep-இன் இணை­யத்­த­ளம் பற்றி உங்­க­ளது முத­லா­ளி­யி­டம் நீங்­கள் கூற­லாம். வேலை-வாழ்க்கை நடை­மு­றை­களை எவ்­வாறு செயல்­

ப­டுத்­து­வது என்­ப­தற்­கான வளங்­கள் இவை. இதில் தனித்­தன்­மை­யான சவால்­களை எதிர்­கொள்­ளும் குறிப்­பிட்ட துறைக்­கும் வளங்­கள் உண்டு.

வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­தில் முத்­த­ரப்பு தர­நி­லை­யையோ அல்­லது நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களில் முத்­த­ரப்பு தர­நி­லை­யையோ அவர்­கள் பின்­பற்­று­மாறு பரிந்­து­ரைக்க உங்­கள் முத­லா­ளியை அணு­க­லாம்.

பிந்­தை­யது 2017 ஆம் ஆண்­டில் முத­லா­ளி­

க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் அதிக நீக்­குப்­போக்­கான வேலைத் தெரி­வு­களை வழங்­கு­வ­தற்­கா­கத் தொடங்­கப்­பட்­டது. இந்த முத்­த­ரப்பு தர­நி­லை

­க­ளுக்கு மாறு­வ­தில் முத­லா­ளி­க­ளுக்கு ஆத­ர­

வ­ளிக்க Tafep தொடர் பயிற்­சி­களை வழங்­கு­கிறது

நிறு­வ­னங்­கள் வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கக் கொள்­கை­களை அமல்­ப­டுத்­து­வதை அர­சாங்­கம் கட்­டா­ய­மாக்­குமா?

வெவ்­வேறு வாழ்க்கை நிலை­களில் மாறு­பட்ட முன்­னு­ரி­மை­க­ளைக் கொண்ட தனி­ம­னி­தர்­க­ளி­டை­யி­லும் வர்த்­த­கங்­க­ளி­டை­யி­லும் வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கம் வேறு­ப­ட­லாம். எனவே, எல்­லா­வற்­றுக்­கும் ஒரே மாதி­ரி­யான தீர்­வு­கள் இருக்­காது. முத்­த­ரப்பு பங்­கா­ளி­கள், பணி­யி­டங்­களில் வேலை-வாழ்க்கை நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற முத­லா­ளி­க­ளுக்­குத் தொடர்ந்து ஆத­ர­வ­ளித்து ஊக்­கு­விப்­பார்­கள்.

வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கம் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­த­வும், அத்­த­கைய நடை­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்த அவர்­க­ளுக்கு வழி­காட்டி வளங்­களை வழங்­க­வும் வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயல்­கூட்­ட­ணி­யு­டன் பணி­பு­ரி­வது இதில் அடங்­கும். முத­லா­ளி­க­ளுக்கு மேலும் ஊக்­கு­விப்­பும் ஆத­ர­வும் வழங்­கும் வகை­யில், இந்த ஆண்டு வேலை-வாழ்க்கை நல்­லி­ணக்­கத்­தின் முத்­த­ரப்பு தரத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வோர், மனித மூல­த­னத்­தைக் கண்­ட­றி­யும் கரு­வியை (Human Capital Diagnostic Tool) இல­வ­ச­மா­கப் பயன்­ப­டுத்­தும் வச­தி­யைப் பெறு­வர். இந்­தக் கருவி, நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் மனி­த­வள செயல்­மு­றை­க­ளின் முதிர்ச்­சியை மதிப்­பி­டு­வ­தற்­கும், வர்த்­தக, ஊழி­யர் தேவை­க­ளுக்கு சிறந்த ஆத­ரவு வழங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களை அடை­யா­ளம் காண்­ப­தற்­கும் தகுந்த தக­வல்­களை வழங்­கு­கிறது. இது குறை­வா­கவே இருப்­ப­தால், முத­லில் வரு­வோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

எனது ஊழி­யர்­க­ளுக்கு மன அழுத்­தம் இருக்­கி­றதா என்­பதை நான் எவ்­வாறு அடை­யா­ளம் காண்­பது? பொது­வான அறி­கு­றி­கள் உள்­ளதா?

பணி­யி­டத்­தில் மன அழுத்­தத்­தின் கார­ணங்­களை அடை­யா­ளம் காண, மார்ச் மாதத்­தில் மனி­த­வள அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­திய iWorkHealth எனும் இணை­யக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த­லாம். இந்த இல­வச மதிப்­பீட்டு முறை­யில், ஊழி­யர்­கள் தங்­க­ளது உள­வி­யல் நலம் குறித்து சுய­மாக ஆய்வு செய்­து­கொள்­வ­தற்­கான கேள்­வி­கள் உள்­ளன. இது முத­லா­ளி­கள் தங்­க­ளின் ஊழி­யர்­க­ளது நல்­வாழ்வு குறித்து அறிய உத­வும்.

வேலைத் தேவை­கள், வேலை­யில் அங்­கீ­

கா­ரம், பணி­யிட கலா­சா­ரம், மேற்­பார்­வை­யா­ளர்­கள் மற்­றும் சக ஊழி­யர்­க­ளு­ட­னான உற­வு­கள் போன்­ற­வற்றை இக்­கேள்­வி­கள் உள்­ள­டக்­கி­யுள்­ளன. ஊழி­யர்­கள் தங்­கள் பதில்­க­ளைச் சமர்ப்­பித்­த­தும், அவர்­க­ளுக்­கான அறிக்­கையை இக்­க­ருவி உரு­வாக்­கித் தரும். அதோடு, முக்­கிய பணி­யிட அழுத்­தங்­களை அடை­யா­ளம் காட்­டும் ஒருங்­கி­ணைந்த, பெயர் குறிக்­கப்­ப­டாத அறிக்­கையை நிறு­வ­னங்­க­ளுக்­காக உரு­வாக்­கித் தரும்.

இந்த அறிக்­கை­க­ளி­லும் iWorkHealth இணை­யத்­த­ளத்­தி­லும் (iworkhealth.gov.sg) பணி­யிட அழுத்­தத்தை நிர்­வ­கிப்­ப­தற்­கான பரிந்­து­ரை­களும் இடம்­பெற்­றி­ருக்­கும். ஊழி­யர்­க­ளு­ட­னான உரை­யா­டல்­கள், பணி­யிட கலா­சார ஆய்­வு­கள் போன்­றவை மூல­மான கருத்­துக்­க­ணிப்­பு­க­ளு­டன் இந்­தத் தர­வைப் பயன்­ப­டுத்த முத­லா­ளி­கள் ஊக்கு­விக்­கப்­ப­டு­கி­றார்­கள்.