கிளமெண்டி வனப்பகுதியில் இரு இயற்கை வழித்தடங்கள்; 2023க்குள் ஒன்று தயார்

கிளமெண்டி வனப்பகுதியில் இரு இயற்கை வழித்தடங்கள்; 2023க்குள் ஒன்று தயார்

2 mins read
268df292-9c8c-45a0-a407-6889b7ca36aa
-

கிள­மெண்டி வனப்­ப­கு­தி­யின் சில இடங்­கள் பாது­காக்­கப்­படும். இங்கு இரண்டு இயற்கை வழித்தடங்­கள் அமைக்­கப்­படும் என்று தேசிய பூங்­க­காக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த செழு­மை­யான வனப்

­ப­குதி­யும் அங்­குள்ள விலங்­கி­ன­மும் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்று இயற்கை ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­தி­ருந்த நிலை­யில் தற்­பொ­ழுது இந்த அறி­விப்பு வந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

கிள­மெண்டி வனப்­ப­கு­தி­யில் உள்ள ஒரு நதியை ஒட்டி இரண்டு கிலோ­மீட்­டர் நீள­முள்ள இயற்­கை வழித்தடத்­தின் ஒரு பகுதி அமை­யும். இது அங்கு உள்ள ரயில் தண்­ட­வா­ளப் பகு­தி­யு­டன் இணைந்து டோவர் வனப்­ப­கு­தி­யில் அமை­ய­வுள்ள மற்­றொரு இயற்­கைப் பூங்கா பகு­தி­யு­டன் சேரும்.

மற்­றோர் இயற்ை­க வழித்தடம் பழைய ஜூரோங் இயற்­கைத் தடம் என்ற பெய­ரு­டன் பழைய ரயில் தடம், அதை ஒட்­டிய மேம்­பா­லங்­கள், சுரங்கப் பாதை­கள் வழி அமை­யும். இது 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து படிப்­ப­டி­யாக கட்டி முடிக்­கப்­படும் என்று கழ­கம் கூறி­யது.

இந்த இரண்டு தடங்­களும் புதி­தாக அமை­ய­வுள்ள 3 கிலோ­மீட்­டர் பூங்கா இணைப்­புப் பாதை வழி ஜூரோங் ஏரிப் பூங்­காப் பகு­தியை இணைக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மொத்­தத்­தில், தற்­பொ­ழுது அமை­ய­வுள்ள இந்த இரண்டு இயற்­கை வழித்தடங்­கள், ஏற்­கெ­னவே உள்ள பசுைமத் தடங்­கள், பூங்கா இணைப்­புப் பாதை­கள் போன்­றவை சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­வாழ் மக்­க­ளுக்கு 18 கிலோ­மீட்­டர் நீள­முள்ள தடங்­களை வழங்­கும் என்­பதை கழ­கம் சுட்­டிக்­காட்­டு­கிறது.

இந்த இயற்­கை வழித்தடங்­கள் பற்­றிய அறி­முக நிகழ்ச்­சி­யில் காணொ­ளி­வழி நேற்று பங்­கேற்ற தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, இவ்­வி­ரண்டு தடங்­களின் மூலம் சிங்­கப்­பூ­ரர்­கள், உயிர் பன்­மு­கத்­தன்­மைக்கு குைறவான பாதிப்­பு­டன், பாது­காப்­பான முறை­யில் பசுமை நிலப்­ப­ரப்பை கண்டு களிக்க முடி­யும் என்­றார்.

அதேவேளையில் நாட்டின் மரபுடமையும் பாதுகாக்கப்படும் என்று விளக்கிய அமைச்சர், பழைய ஜூரோங் இயற்ைகத் தடத்தில் இயற்கை அழகுடன் மரபுடமையும் சேர்ந்துள்ளதால் சிங்கப்பூரர்கள் இரண்டையும் ஒருசேர அனுபவிக்க லாம் என்பதையும் சுட்டினார்.

சிங்கப்பூரின் வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய ஆர்வலர்களால் கிளமெண்டி, டோவர் வனப்பகுதிகள் மீது அக்கறை எழுந்தது.