செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bc57d9f1-fb87-4aea-8b9c-70e0a14ed453
-

கதைக்களத்தில் மூத்த எழுத்தாளர்,

பத்திரிகையாளர் ஏ.பி. ராமன்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இணையம் வழி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல விருதுகள் பெற்ற மூத்த எழுத்தாளர், இதழாசிரியர், பத்திரிகையாளர் திரு ஏ.பி. ராமன் கலந்து கொள்கிறார்.

அவருடைய படைப்புகள், இலக்கிய ஈடுபாடு மற்றும் சிங்கப்பூர் தமிழர்களை ஆவணப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றி எழுத்தாளர்கள் திரு சியாம் குமார், திருவாட்டி சௌந்தரநாயகி வயிரவன், திருவாட்டி புஷ்பலதா நாயுடு ஆகியோர் உரையாற்றுவர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும். பன்னாட்டு இலக்கியத் தூதர், முதுமையிலும் தளராத எழுத்தார்வமிக்க திரு ஏ.பி. ராமனுடன் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான ஸூம் இணைப்பு: http://singaporetamilwriters.com/kathaikalamzoom/ மூலம் கலந்துகொள்ளலாம். Meeting ID: 853 0120 6016, Passcode: astw

நீரில் மூழ்கி மாள்வதை தடுக்கும் தினம்

நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்கு வரும் தமது மாணவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க நீச்சல் பயிற்சியாளர் டேனி ஓங் அவர்களை நன்றாக மூச்சைப் இழுத்துப் பிடித்து உதவி கேட்டு உரக்கக் கத்துமாறு கேட்டுக்கொள்கிறார்.

ஆனால், அவரிடம் பயிற்சி பெறுவோரிடம் இருந்து எந்த ஓசையும் வருவதில்லை.

அப்பொழுது அவர் பயிற்சிக்கு வரும் பிள்ளைகளிடம் சொல்வது இதுதான்: திரைப்படங்களில் வருவது போலல்லாது நீரில் மூழ்குவது அமைதியாக நிகழும் ஒன்று.

"நாம் அனைவரும் படங்களால் ஏமாந்து போகிறோம். அங்குதான் நடிகர்கள் நீரில் மூழ்கும்போது கைகளை அசைத்து கத்துவதெல்லாம்," என்று நீரில் மூழ்குவதற்கு எதிரான 'புரோஜெக்ட் சைலண்ட்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ள திரு ஓங் கூறுகிறார்.

அவரது இந்த முயற்சி உலக நீரில் மூழ்கி மாள்வதற்கு எதிரான தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த பல அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்று. அந்த தினத்தின் நினைவாக இதுபோன்ற முயற்சி முதன்முதலாக ஜூலை மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை, உலகில் மனிதர்கள் நீரில் மூழ்கி மாள்வதால் சமூகங்களுக்கு ஏற்படும் இழப்பு, அதைத் தடுக்கும் வழிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்ட அறிமுகப்படுத்தியது.

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 236,000 பேர் உலகம் முழுவதும் நீரில் மூழ்கி மரணமடைவதாகக் கூறும் உலக சுகாதார நிறுவனம், இது எதிர்பாராத மரணங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது. அத்துடன் இதில் உண்மையாக மரணமடைவோர் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றும் கூறுகிறது.