மலேசிய மாமன்னரான சுல்தான் அப்துல்லா அகமது ஷா, கடந்த பிப்ரவரியன்று திரு முகைதீன் யாசினைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். அந்தப் பதவியை டாக்டர் மகாதீர் முகம்மது தொடர்ந்து தக்கவைப்பார் என எண்ணியோர் ஏமாற்றமடைந்தனர்.
திரு முகைதீன் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதை தாம் உறுதி செய்ததாக மாமன்னர் கூறினார். 17 மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் முகைதீனுக்கான ஆதரவு குறைந்துள்ளது.
ஜனவரியின்போது மாமன்னரின் ஒப்புதலுடன் மலேசியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை ஆகஸ்ட் 1ஆம் தேதி காலாவதி ஆக வேண்டி இருந்தது. இருந்தபோதும் நாடாளுமன்றம் அடுத்த மாதம் தான் திறக்கப்படும் என திரு முகைதீன் தெரிவித்தார். இது குறித்து மாமன்னரும் மாநில மன்னர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மாமன்னர் பதவியில் ஒருவர் அரசாங்கத்தை இப்படி வெளிப்படையாக விமர்சித்தது இதுவரை நடந்ததில்லை. இருந்தபோதும், தமது அரசாங்கம் பொதுச் சட்டத்துடனும் அரசமைப்பு சட்டத்துடனும் ஒத்துப்போகும் விதமாக நடந்துகொண்டதாக மாமன்னர் தெரிவித்தார்.
மலேசியாவில் மாமன்னரின் அதிகாரம் பெரும்பாலும் சடங்குபூர்வமானது. பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படி மன்னர் தமது கடமைகளைச் செய்கிறார்.

